கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி இந்திய உயர் நீதிமன்றில் பொது நல மனு தாக்கல்

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட  பொது நல மனுவை இந்திய உயர்  நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.  கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி மதுரையை சேர்ந்த K.K.ரமேஷினால்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த பொது நல…

இன்று நடைபெறும் மிக்கைல் கோர்பசேவ் இறுதி சடங்கில் புதின் பங்கேற்பாரா..?

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் கரிசனை கொள்வதாக பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் Liz Truss தெரிவிப்பு

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளர்கள் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.  இலங்கையில் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தமது கரிசனையினை கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான Liz Truss வௌிப்படுத்தியுள்ளார்.…

வெள்ளத்தால் சேதமான பகுதிகளை பார்வையிட பாகிஸ்தான் செல்கிறார் ஐ.நா.சபை பொது செயலாளர்

பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம்…

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீப்பிடித்த பயணிகள் கப்பல் – 80 பேர் மீட்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரிலிருந்து பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் இருந்தனர்.   துறைமுகத்தை நெருங்கியபோது கப்பலில் தீப்பிடித்தது.…

வெள்ள அனர்த்தம் காரணமாக பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 937 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை தெரிவித்துள்ளது.   பருவமழை மற்றும் வெள்ளத்துக்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில்…

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை ஜொ்மனியில் ஆரம்பம்

உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில் சேவை ஜொமனியில் கடந்த  24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. லோயா் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், 4 நகரங்களை இணைக்கும் 100 கி.மீ. ரயில் பாதையில் இந்தச் சேவை…

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு 320 மெட்ரிக் தொன் கடலைப் பருப்பு நன்கொடை

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்க அமெரிக்கா 320 மெட்ரிக் தொன் கடலைப் பருப்பை  நன்கொடையாக வழங்கியுள்ளது. அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்தின் ஊடாக Save the Children நிறுவனத்துடன் இணைந்து இன்று இந்த உணவுப் பொருட்கள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம்…

இலங்கையில் ஜனநாயகம் அழிக்கப்படுகிறது :அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

இலங்கையின் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகளின் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். அவர் தனது…

அமெரிக்காவில் எரிபொருள் தீர்ந்ததால் விழுந்து நொருங்கிய விமானம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடுவானில் பறந்த சிறிய ரக விமானமொன்று எரிபொருள் தீர்ந்து வீட்டின் மேற்கூரையின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. ஆர்லாண்டோ நகர் பகுதியில் பறந்து கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் எரிபொருள் தீர்ந்து விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.…