இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரிகள் செய்த பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை அந்த நாட்டின் அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து…

இலங்கைத் தமிழ்ப் பெண்மணி நோர்வேயில் எம்.பி.யாகத் தெரிவு

நோர்வேயில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழரான ஹம்ஸி குணரட்ணம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   மூன்று வயதில் தனது பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாக வந்த ஹம்ஸி (ஹம்சாயினி), தமிழ் இளையோர் அமைப்பில் இணைந்து அரசியலுக்கு வந்தவர்.…

தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்கிறார் புட்டின்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், வைரஸ் உருமாற்றம் அடைந்து வீரியம் இழக்காமல் உள்ளது. கீழ்மட்ட மக்கள் முதல் நாட்டின் அதிபர் வரை யாராக இருந்தாலும் பயந்து ஓட வேண்டிய நிலை உள்ளது.ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால்…

பாகிஸ்தானில் தொடரும் கனமழை பாதிப்பால் 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோர் கார் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால், மழையுடன் தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால், 5 வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.  கராச்சி…

லொஸ் ஏஞ்சல்ஸில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என அறிவிப்பு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாடசாலை…

அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்களின் 20ஆண்டு பூர்த்தி இன்று; இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இன்று 20 ஆண்டுகள் நிறைவாகும். இத்தாக்குதல்கள் பலர் தங்கள் உயிரையும் உறுப்புகளையும் இழக்க வழிவகுத்தன.   அமெரிக்காவின் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கம் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியது. ஏனெனில் அவர்கள் வரலாற்றில்…

ஆப்கானிலிருந்து புறப்பட்ட முதல் சர்வதேச விமானம்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15ஆம் திகதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதனால் ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து ஆட்சி அதிகாரம் தங்கள் வசமானதாக அறிவித்த தலிபான்கள், விரைவில்…

குவைத் எயார்வேஸின் கொழும்புக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

குவைத் எயார்வேஸ் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) முதல் கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இரு நகரங்களையும் இணைக்கும் வகையில், வாரத்துக்கு ஒரு விமானத்தை மட்டுமே இயக்கவுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்புடன் இந்தியா, பாகிஸ்தான் மற்றும்…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசு

ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள், அங்கு அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் காபூலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆப்கானிஸ் தானில் அமையும் தலிபான்களின் இடைக்கால அரசில் முல்லா முகம்மது ஹசன் அகண்ட் தலைவராகவும்,…

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவல்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொடிய ‘நிபா’ வைரஸ் மீண்டும் தலையெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நிபா வைரஸ் மூளைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸானது நேரடியாக வௌவால்கள், பன்றிகள் மூலம் மக்களுக்குப் பரவுகின்றது. இந்தியாவில் சுமார் 20 பேருக்கு…