எண்ணெய் விலையைக் குறைக்க உற்பத்தி நாடுகள் இணக்கம்

எஎண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அதிகரித்து வரும் எண்ணெய் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்டுள்ளன. கொரோனா தொற்றுநோயின் ஆரம்பக் கட்டங்களில் எண்ணெய்க்கான கேள்வி வீழ்ச்சியடைந்ததால் எண்ணெய் விலை குறைந்தது. இதன் காரணமாக, மேற்கண்ட நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த…

கொவிட் தடுப்பூசி போடவில்லையாயின் சம்பளம் இல்லை: பிரெஞ்ச் அரசு தீர்மானம்

பிரெஞ்ச் சுகாதாரத் தொழிலாளர்கள் கொவிட் தடுப்பூசி போடவில்லை எனின் சம்பளம் வழங்குவதில்லை என  பிரெஞ்ச் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மருத்துவர்கள், தாதியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் இது குறித்து அறிக்கை வழங்கியுள்ளது. பிரெஞ் அரசாங்கக் கூற்றுப்படி அவர்கள்…

பார்வையாளர்களின்றி இம்முறை ஒலிம்பிக் போட்டிகள்!

டோக்கியோவில் அவசரகால நிலை இன்று(12) முதல்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் பார்வையாளர்களின்றி நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் தற்போது நிலவும் கொவிட் அபாய நிலையைக் கருத்தில் கொண்டே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த…

இந்திய வம்சாவளிப் பெண் ஸ்ரீஷா இன்று விண்வெளிக்குப் பயணம்

ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4ஆவது நபராக ஸ்ரீஷா உள்ளார். விர்ஜின் கேலடிக் என்பது ஓர் அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமாகும். இந்த நிறுவனம் சோதனை முயற்சியின்…

பங்களாதேஷில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ விபத்து; 50 க்கும் அதிகமானோர் பலி

பங்களாதேஷில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டாக்காவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ருப்கன்ஜி நகரில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. வியாழக்கிழமை…

ஹெய்ட்டி ஜனாதிபதியைக் கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை- 2 பேர் கைது

ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டவர்களில் நான்கு பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தென்அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் ஹெய்ட்டி என்ற தீவு நாடு அமைந்துள்ளது. இதன் ஜனாதிபதியாக ஜோவெனல் மாய்சே பதவி வகித்தார்.…

நைஜீரியாவில் பாடசாலையில் புகுந்து 140 மாணவர்கள் கடத்தல்

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உட்பட பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததோடு பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி மாணவ, மாணவிகளை கடத்திச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.…

28 பேருடன் பயணித்த ரஷ்ய விமானம் மாயம்

ரஷ்ய நாட்டின் கிழக்குப் பகுதி காம்சட்கோ தீபகற்பத்தில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க் கம்சாட்ஸ்கியில் இருந்து பலானாவுக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஏ.என்.26 என்ற அந்த விமானத்தில் 22 பயணிகள், 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் தரையிறங்க முயற்சித்தபோது திடீரென்று விமானக் கட்டுப்பாட்டு…

19ஆம் திகதி முதல் இங்கிலாந்தில் முகக்கவசம் தேவையில்லை

இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. எனவே கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. கொரோனா  பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதை அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இங்கு கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது.…

அறுவைச் சிகிச்சைக்காக பாப்பரசர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 84) கடந்த சில நாட்களாக குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். எனவே இதற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…