ஹெய்டியில் 7.2 நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 304 பேர் இறந்தனர், 1800 பேர் காயமடைந்தனர்

சனிக்கிழமை தென்மேற்கு ஹெய்டியில் சக்தி வாய்ந்த 7.2 நிலநடுக்கம் ஏற்பட்டது, கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 304 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 1800 பேர் காயமடைந்தனர். நகரங்கள் அழிக்கப்பட்ட மற்றும் உள்வரும் நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் பகுதிகளுக்கு அவர்…

பிரான்ஸில் படுகொலைக்குள்ளான தாயும் மகளும் உரும்பிராயைச் சேர்ந்தவர்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில்  பலியான தாயும், மகளும் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிக்கொல்லப்பட்ட இவ்விருவரது உடல்களும், பிரேதப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தடயங்களைக் கண்டுபிடிப்பதில் தடயவியல்…

சீனாவில் பலத்த மழை; 21 பேர் உயிரிழப்பு

சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சீனாவின் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை பெய்தது. ஹூபெய் நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள மக்கள் வெள்ளத்தில்…

பிரான்ஸில் தமிழர்களான தாயும் மகளும் படுகொலை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகரப் பகுதி ஒன்றில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டனர். 52 வயதான தாய் மற்றும் 21வயதான மகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், மிகவும் அதிர்ச்சியடைந்த நிலையிலிருந்த தந்தையும் இரு ஆண் பிள்ளைகளும் பொலிஸாரால்…

ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66ஆவது இடம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. நான்கு பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 66-வது இடத்தைப் பிடித்துள்ளது.மல்யுத்தப் போட்டியில்…

உத்தர பிரதேசத்தில் கோர விபத்து; 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலி

உத்தர பிரதேசத்தின் பரபன்கி மாவட்டத்தில் டிரக் – பேருந்து  மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்து குறித்து உத்தர பிரதேச பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  உத்தர பிரதேசத்தின் லக்னோ- அயோத்யா தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.…

சுவிஸில் நினைவுகூரப்பட்ட கறுப்பு ஜூலை!

இலங்கைத் தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் இனத்துக்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஓர்…

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்ட பெரும்பாலானோருக்கு கொரோனா

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களில் பெரும்பாலானோர் கொவிட் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  சிங்கப்பூரில் தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் மொத்த சனத்தொகையில் 75 வீதம் பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  கடந்த 4 வாரங்களில் 1096 பேருக்கு…

ஜேர்மனி வெள்ளப் பெருக்கில் சிக்கிமீசாலை இளம் குடும்பஸ்தர் பலி!

அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும்வெள்ளப் பெருக்கில் அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர்ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட நீர் ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளது தந்தையான இராசரத்தினம் இலக்குமணன் என்ற…

ஸ்பெயின் நாடாளுமன்றில் புகுந்த எலி; தெறித்து ஓடிய எம்.பிக்கள்

ஸ்பெயின் நாட்டின் அந்தலுசியன் நாடாளுமன்றத்தில், எலி புகுந்து ஓடியதால், எம்.பி.க்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டத்தில், சுசானா டயஸ்-ஐ செனட்டராக நியமிக்க வாக்களிப்பது சம்பந்தமாக நாடாளுமன்ற அவையில் முக்கிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எலி…