ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசு

ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள், அங்கு அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் காபூலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆப்கானிஸ் தானில் அமையும் தலிபான்களின் இடைக்கால அரசில் முல்லா முகம்மது ஹசன் அகண்ட் தலைவராகவும்,…

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவல்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொடிய ‘நிபா’ வைரஸ் மீண்டும் தலையெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நிபா வைரஸ் மூளைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸானது நேரடியாக வௌவால்கள், பன்றிகள் மூலம் மக்களுக்குப் பரவுகின்றது. இந்தியாவில் சுமார் 20 பேருக்கு…

எலிசபெத் மகாராணி இறந்த பிறகு நடக்கும் நிகழ்ச்சிகள் விபரம் கசிந்தது

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்துக்கு தற்போது 95 வயதாகிறது. இந்த நிலையில் அவர் இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கான திட்டங்கள் குறித்த விபரங்கள் தயாரிக்கப்பட்டு ஆவணங்களாக வைக்கப்பட்டுள்ளன. ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் தற்போது கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ஒப்ரே‌ஷன்…

இடா புயல்தாக்கத்தால் கடும் வெள்ளப்பெருக்கு; நியூயோர்க்கில் 7 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை இடா புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கியதைத் தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல் கரை கடந்த போது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டன. கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.…

ஆப்கானிலிருந்துபெற்றோரின்றி தனியாக அவுஸ்திரேலியா சென்றுள்ள சிறுவர்கள்

ஆப்கானிலிருந்து பெற்றோர் இல்லாமல் பல சிறுவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.பத்து வயதிற்கும் குறைவான சிறுவர்கள் தனியாக அவுஸ்திரேலியா வந்துள்ளனர் என…

ஆப்கானிஸ்தானில் 200 அமெரிக்கர்கள் சிக்கித் தவிப்பு

100 முதல் 200 அமெரிக்கர்கள், ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கலாம் என கருதுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் ஒட்டு மொத்த இராணுவமும் இன்று வெளியேறி விட்டது. கடைசி நேரத்தில் ஏராளமான வெளிநாட்டினரும், ஆப்கானிஸ்தான் மக்களும்…

7,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்: டிஎன்ஏவில் புதிய மனித மரபணு

இந்தோனேசியாவில் 7,200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து, புதிய மனித மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியா மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து தெற்கு சுலாவேசி என்ற பகுதியில் 2015ஆம் ஆண்டு முதல் நடத்திய அகழாய்வுகளின் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.அதில், தெற்கு…

ஆப்கானிஸ்தானிலிருந்து பறந்த கடைசி இங்கிலாந்து விமானம்

அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் சொந்த மக்களையும், தங்களுக்கு உதவிய ஆப்கானியர்களையும் மற்றும் அந்த நாட்டில் உள்ள பல மக்களையும் மீட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் காபூலில் உள்ள…

ஆப்கானிலிருந்து தப்பி வந்த பெண்: 12 ஆண்டுகளுக்குப் பின் தாயுடன் உணர்ச்சி மிகுந்த சந்திப்பு

12 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக தாயை நேரில் பார்த்த ஷகிபா, கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்களின் ஆளுகைக்குள் வந்திருக்கிறது. இதனால் அங்கு வாழ அஞ்சிய ஆப்கானியர்கள் பலரும் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். மீட்பு விமானங்கள் மூலம்…

ஆப்கானிஸ்தானிலிருந்துஒரே நாளில் ஆயிரம் பேரை அமெரிக்கா வெளியேற்றியது

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14ஆம் திகதி முதல் அங்குள்ள தனது குடிமக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. திங்கட்கிழமை காலை தொடங்கி நேற்றுக் காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மிக அதிகளவாக 21 ஆயிரத்து 600 பேரை வெளியேற்றி இருக்கிறது.…