ஆசியாவின் 2வது பணக்காரர் ஆனார் அதானி; ஒரு நாள் வருமானம் ரூ.1002 கோடி!

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ள அதானி குழுமம், கடந்தாண்டில் நாளொன்றுக்கு ரூ.1002 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக ஐஐஎஃப்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐஐஎஃப்எல் நிறுவனம் 2020-2021-ம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.7.18 லட்சம் கோடி…

ஈக்குவடோர் நாட்டில் சிறை மோதலில் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது

ஈக்குவடோர்  நாட்டில் குவாகுயில் நகரச் சிறையில் கடந்த 28ஆம்  திகதி இரு போட்டிக் கும்பல்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலின்போது இரு கும்பல்களும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் தொடுத்தனர்.இதில் 24 பேர் பலியானதாக முதல்…

அவுஸ்திரேலியா நவம்பர் மாதம் மீண்டும் எல்லைகளைத் திறக்கின்றது

அவுஸ்திரேலியப் பிரஜைகள் வெளிநாட்டுக்கு பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 18 மாத தடை நவம்பர் மாதம் நீக்கப்படும் என  அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியப் பிரஜைகள் மற்றும் நிரந்தர வதிவிடப் பிரஜைகளுக்கான இந்தத் தடை நீக்கத்துடன் அவுஸ்திரேலியாவின் எட்டு மாநிலங்களில் உள்நாட்டு தனிமைப்படுத்தல்…

தாய்லாந்தில் சூறாவளி; கன மழையால் 7 பேர் பலி

தாய்லாந்து நாட்டில் டியான்மு சூறாவளி தாக்கியதில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அதிகளவு பெய்த கன மழையால் வீடுகள் மூழ்கிய நிலையில் மக்கள் மேல் கூரைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில்  கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கியுள்ளதுடன் இதுவரை 7 பேர்…

இளம் தமிழ்ப் பெண் மருத்துவர் இங்கிலாந்தில் நீரில் மூழ்கிப் பலி

இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அர்ப்பணிப்புடன் சிகிச்சை வழங்கிய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் மருத்துவர் நீச்சலில் ஈடுபட்ட வேளை உயிரிழந்த சம்பவம்  அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இங்கிலாந்தின் மார்கேட் கடலில் மூழ்கி உயிரிழந்த இளம்…

ஆப்கானுக்கு சர்வதேச விமானங்களை இயக்க தலிபான்கள் அழைப்பு

ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு சர்வதேச விமானங்கள் மற்றும் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் தயாராக இருப்பதாக தலிபான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் இருந்து…

அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டு பழைமையான மனிதனின் கால் தடம் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் கால் தடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் வடக்குப் பகுதியிலுள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது மிகவும் பழைமையான மனித கால் தடத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.…

குற்றங்கள் செய்தால் அந்தத் தண்டனை உறுதி : தலிபான்கள் அறிவிப்பு

எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றியதைப் போல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் சிறைத்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலிபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி…

இலங்கை உட்பட 5 நாடுகளின் பயணிகளுக்கு தடையை தளர்த்தியது மலேசியா!

இலங்கை உட்பட 5 நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மலேசியா தளர்த்தியுள்ளது.   இதன்படி நிரந்தர வதிவிட அஸ்தஸ்து, நீண்ட கால பாஸ், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர் குறித்த 5 நாடுகளிலிருந்து மலேசியாவுக்குள் நுழையலாம். மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலைத்…

உலகில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3.1 மி.மீற்றர் உயர்வதாகத் தகவல்

உலகளவில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3.1 மில்லிமீற்றர் என்ற அபாயகரமான அளவில் உயர்ந்து வருவதாக ஐரோப்பிய ஆணையகத்தின் கீழ் இயங்கும் கொப்பர்நிக்கஸ் மரைன் சேவிஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.   கடல்கள் வெப்பமயமாவதாலும் நிலப்பரப்பு உருகுவதும் கடல் மட்டம் உயர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…