விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியவில்லை – கனேடிய மக்கள் கவலை

கடும் விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியவில்லை என பெரும்பான்மை கனேடிய மக்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அண்மையில்  முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 57% கனேடிய மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியாத அளவுக்கு விலைவாசி…

அண்டார்டிகாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து

அண்டார்டிகாவில் காலநிலை மாற்றத்தால் பென்குவின்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.அண்டார்டிகாவில் அடெலி, ஜென்டூ என இருவகை பென்குவின்கள் வசிக்கின்றன. இந்நிலையில் காலநிலை மாற்றத்தைத் தொடர்ந்து அங்கு வெப்பநிலை அதிகரித்ததால், கடல் நீர் உறைந்து காணப்படும் பகுதிகளின் பரப்பளவு சுருங்கியது. இதனால்,…

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் – ஐ.நா.சபை கண்டனம்

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில்  2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்தமைக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே…

ஆப்கானிஸ்தானில் இரட்டை நிலநடுக்கம் – 22 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதேபோல், மாலை 4 மணிக்கு 4.9 ரிக்டர் அளவுகோலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த இரு…

மேற்கு வங்காள ரயில் விபத்து; பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பிகானர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று தடம்புரண்ட விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகிறது. மொத்தம் 12 பெட்டிகள் தடம்புரண்டன. தோகோமணி அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே…

தென்னாபிரிக்க நெடுஞ்சாலை விபத்தில் 16 பேர் உடல் கருகிப் பலி

தென்னாபிரிக்காவில் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த வீதி விபத்தில் 16 பேர் உடல் கருகிப் பலியாகினர். லிம்போபோ பகுதியில் இந்தப் பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய பேருந்து(மினி பஸ்) ஒன்று காருடன் மோதியதில் பேருந்து…

விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டுக் கருவிகளை சேதப்படுத்திய பயணி

அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டுக் கருவிகளை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுரஸில் இருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்குச் சொந்தமான போயிங் 737-800 விமானம் செல்லவிருந்தது. இந்த விமானத்தில் 121…

அமெரிக்கா வெளியிட்ட அரிய வகை நாணயம்

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.பிரபல எழுத்தாளரும் பெண்ணிய ஆர்வலருமான மாயா ஏஞ்சலோ தனது சுயசரிதையால் பிரபலமானவர். அமெரிக்காவில் கணிசமான சர்ச்சையை ஏற்படுத்திய அந்தப் புத்தகத்தில், சிறு வயதில் தான் அனுபவித்த பாலியல் துஷ்பிரயோகம் மற்றும்…

நியூயோர்க்கில் தீ விபத்து ; சிறுவர்கள் உட்பட 19 பேர் உடல் கருகிப் பலி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 சிறுவர்கள் உட்பட  19 பேர் பலியாகினர்.தீ விபத்தில் மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும்  உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19 மாடிக்…

சீனாவில் கேஸ் கசிந்து வெடி விபத்து – அரசுக் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி

சீனாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள வூலாங் மாவட்டம் சோங்கிங் நகரில் அரசு துணை மாவட்ட அலுவலகம் செயற்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மதிய உணவு இடைவேளையின் போது ஊழியர்கள் அங்குள்ள அறையில் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு…