டலஸ்  130  வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியீட்டுவார்- ராஜித சேனாரத்ன எம்.பி.

புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக வாக்கெடுப்பு நாளை (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், இதில் 130க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று டலஸ் அழகப்பெரும வெற்றியீட்டுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். டலஸ் அழகப்பெரும தரப்புக்கும் சஜித்…

காலியில் ரயில் காருடன் மோதி விபத்து; கர்ப்பிணிப் பெண் உட்பட 6 பேருக்கு காயம்

காலி – மாகல்ல அனுலாதேவி பெண்கள் கல்லூரிக்கு அருகில் இன்று காலை காரொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காரில் பயணித்த கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு சிறு பிள்ளைகள் உட்பட 6 பேர் காயமடைந்து…

GOTA GO HOME உறுப்பினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி?

காலி முகத்திடல் போராட்டத் தளமான கோட்டா கோ ஹோமின் மூன்று முன்னணி செயற்பாட்டாளர்கள் வெளிநாடுகளிலிருந்து மூன்று உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு பெருமளவிலான நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   இந்தக்…

பேருந்து கட்டணத்தை திருத்தம் செய்ய தயாராக உள்ளோம் – பேருந்து உரிமையாளர்கள் சங்கச் செயலாளர்

எரிபொருள் விலை திருத்தத்தின் மூலம் அந்த நன்மையை மக்களுக்கு வழங்க முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர்…

முன்னாள் ஜனாதிபதி அமெரிக்கா செல்வதைக் கைவிட்டு ஓகஸ்டில் நாடு திரும்பத் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடு திரும்புவதற்குத் தயாராகி வருகிறார். தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் நாட்களில் சவூதி அரேபியா செல்லவுள்ளார். இம்மாத இறுதி வரை அங்கு தங்கியிருக்கும் அவர், அதன் பின்னர் இலங்கைக்கு…

அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து இலங்கைக்கு பெருமளவு மருந்துகள் நன்கொடை

இவ்வாறு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 32 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளில் முதல் பகுதியை இலங்கை பெற்றுள்ளதுடன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் தலையீட்டின் மூலம் ‘ஹார்ட் டு ஹார்ட்’ என்ற சர்வதேச அமைப்புடன் இணைந்து…

எரிபொருள் கப்பல்களின் வருகை குறித்து எரிசக்தி அமைச்சரின் அறிக்கை

இன்று (16) முதல் தொகுதி டீசல் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அமைச்சர், டீசல் இருப்பு இன்று அதிகாலை கொழும்பு வந்தடைந்ததாகத் தெரிவித்துள்ளார். தற்போது தர மாதிரிகள்…

ரஞ்சனை விடுதலை செய்ய பதில் ஜனாதிபதி தீர்மானம்

சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ரஞ்சன் ராமநாயக்கவின்…

நுவரெலியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் அமைதியின்மை

நுவரெலியா பிரதான நகருக்கு கடந்த  வியாழக்கிழமைக்குப் பின்னர் இன்று(16) லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என்ற அறிவிப்பின் பின்னர் இரண்டு நாட்கள் வரிசையில் இருந்தவர்களுக்கும், விற்பனை முகவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது. விற்பனை முகவர்…

சில நாடுகளுக்கான எயார் மெயில் -அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்வது இடைநிறுத்தம் : இலங்கை தபால் திணைக்களம்

சில நாடுகளுக்கான அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்வது  மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கைக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்கா, நெதர்லாந்து,…