கடந்த 13ஆம் திகதி இலங்கை தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சித்த டனிஸ் அலி என்பவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். டுபாய் செல்ல முற்பட்ட வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…
Category: SRI LANKA 1
பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து
புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில், இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மக்களின் பரஸ்பர…
கம்பஹாவில் மீண்டும் கொரோனா அபாயம்
கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், பல…
ரணிலின் வெற்றிடத்துக்கு வஜிர அபேவர்தன நியமனம்
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். பாராளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது அவர் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். ஐக்கிய தேசிய…
கொவிட்-19 சுகாதார விதிமுறைகளை மீண்டும் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தல்
மேல் மாகாணம் மற்றும் பிற மாகாணங்களில் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறியளவு அதிகரிப்பு உள்ளதாக கொவிட்-19 தொடர்பான சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இன்று (25) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மக்கள் முன்னர் கடைப்பிடித்த…
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை நோயாளர்களுக்கு மருந்துகள் அன்பளிப்பு
யாழ். ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் நலன் கருதி இலங்கை செஞ்சிலுவைச் சங்க யாழ். கிளையினூடாக ஒரு தொகுதி மருந்துகளும் மேலும் அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக சிவநந்தி அறக்கட்டளை ஊடாக ஒரு இலட்சம் ரூபாவும் கனகம்மா அறக்கட்டளை ஊடாக…
யாழ்ப்பாணத்தில் இ.போ.ச.-தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பு
இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் தனியார் பேருந்துகள் எரிபொருள் பெறும்போது பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் உரிய முறையில் எரிபொருள் தமக்கு வழங்கப்படாததையடுத்து யாழ்ப்பாணம் மாவட்ட தனியார் பேருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் சேவைகள் இன்று இடம்பெறவில்லை. இன்று திங்கட்கிழமையும் தமக்கு எரிபொருள்…
பாடசாலைகள் 5 நாட்களும் இடம்பெறும் -கல்வி அமைச்சு
எரிபொருள் பற்றாக்குறையால் போக்குவரத்துச் சிரமங்கள் காரணமாக அனைத்து பாடசாலைகளும் கடந்த 2 – 3 வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் , நாளை ஜூலை 25ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதே நேரம்…
இரு வாரங்களுக்குள் சர்வ கட்சி அரசாங்கம்
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான கட்சிகள் மற்றும் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இன்னும் இரண்டு வாரங்களில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ,…
அடுத்த வாரம் ஆறு எரிவாயு கப்பல்கள் வரும் -லிட்ரோ
அடுத்த வாரத்தில் மேலும் ஆறு எரிவாயு கப்பல்கள் நாட்டை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, இம்மாதத்தில் எரிவாயு இருப்பு 33,000 மெட்ரிக் தொன்னாக இருக்கும். பொதுமக்களுக்கு தொடர்ந்து எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.…

