தேயிலைக் கொழுந்துகளின் விலை 100 வீதம் அதிகரிப்பு

தேயிலைக் கொழுந்துகளின் விலை 100% அதிகரித்துள்ளதாக சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் பச்சைத் தேயிலையின் விலை தற்போது 260 ரூபாவை தாண்டியுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதர்சன தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு…

கால்நடை தீவனத்துக்கு கடுமையான தட்டுப்பாடு;பால், முட்டை, கோழி உற்பத்தி பாதிப்பு

பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி கடுமையாகக் குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும், கோழி இறைச்சி உற்பத்தி 12.1 சதவீதமும் குறைந்துள்ளன. கால்நடைத் தீவனத்தை முறையாக…

ரஞ்சனை விடுவிக்க அனைத்து ஆவணங்களும் தயார்

தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த ஆவணத் தொகுப்புக்கு சட்டமா அதிபரின் மேலும் ஒரு பரிந்துரை…

மக்களின் பிரச்சினைகள், நெருக்கடிகள் தீர்ந்ததும் தேர்தல் நடத்தப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் நிலவும் நெருக்கடிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நெருக்கடிகள் நிறைவடைந்து மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்குத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்…

ஜனாதிபதி மாளிகையில் சொத்துகளை சேதப்படுத்திய ஐவர் கைது

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற பொது அமைதியின்மையின் போது கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சட்டவிரோதமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் ஒருவர் ஜனாதிபதியின் இல்லத்தில்…

யாழில் போதைப்பொருள் பாவனையால்  இளைஞன் பலி

யாழ். திருநெல்வேலி, பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்து கொண்டதால் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் அண்மையில் இருதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு சிகிச்சையளித்து மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் நேற்று முன்தினம் (26) மீளவும்…

அங்கோலா நாட்டில் அரிய வகை வைரம் கண்டுபிடிப்பு

ஆபிரிக்க நாடான அங்கோலாவில் உள்ள லுலோ சுரங்கத்தில் அரிய வகையான மிகப்பெரிய வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய இளஞ்சிவப்பு வைரம் என அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லுகாபா டயமண்ட்…

பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்கு சீனாவிலிருந்து அரிசி

500 மில்லியன் யுவான் மனிதாபிமான உதவியின் கீழ் சீனா வழங்கிய 5ஆவது கட்ட அரிசி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அரிசிக் கையிருப்பு 1000 மெட்ரிக் தொன் என்பதுடன் அவை பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத் தேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளது. அதன்படி இதுவரை சீனா…

புகையிரத செலவினத்துடன் ஒப்பிடுகையில் வருமானம் அதிகரிக்கவில்லை – அமைச்சர் பந்துல

இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு இவ்வருடம் நாளொன்றுக்கு 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நீண்ட காலமாக புகையிரதச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், வருமானம் அதிகரிக்காததால் திணைக்களத்தின் இழப்பு ‘வியக்கத்தக்க வகையில்’ அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர்…

எரிபொருள் கடத்தலை கைப்பற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ரொக்கப் பரிசு

சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேகரித்து அதிக விலைக்கு விற்கும் இடங்களை சோதனை செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வெகுமதிப் பணத்தை வழங்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்.அதன் பிரகாரம், சோதனையின் மூலம் 100 முதல் 500 லீற்றர் எரிபொருள் கைப்பற்றப்பட்டால், அதிகபட்சமாக இரண்டு…