Category: SRI LANKA 1
கடும் மழை காரணமாக 4 பேர் பலி ; 986 வீடுகள் சேதம்
கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை அதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 986 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் 10 மாவட்டங்களில் 3,037 குடும்பங்களைச் சேர்ந்த 12,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 480…
நாட்டில் மின் நுகர்வு 20 வீதத்தால் குறைந்துள்ளது: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இலங்கையில் மின்சார அலகுகளின் பாவனை இருபது வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் மின்சார பாவனையாளர்கள் நாளொன்றுக்கு 48 மில்லியன் யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி வந்த போதிலும் தற்போது 38 மில்லியனாக குறைந்துள்ளதாக இந்த…
மடுத் திருவிழவை முன்னிட்டு விசேட ரயில் சேவை
எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணித் திருவிழாவை முன்னிட்டு விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து மடு புகையிரத நிலையத்துக்கும், அநுராதபுரத்தில் இருந்து…
8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்
கனமழை மற்றும் பலத்த காற்று நாட்டின் பல பகுதிகளை பாதித்துள்ளதுடன், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தியது, இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி,…
2026இல் பலமிக்கதொரு பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம்: ஜனாதிபதி ரணில்
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேர்வில் நான் ஜனாதிபதியானேன். நான் பாரிய பொருளாதார நெருக்கடி ஒரு புறத்திலும், மக்கள் எதிர்ப்பலைகள் மறுபக்கத்திலும் இருக்கும் தருணத்தில், எனினும் நாட்டுகாக இந்த சவாலை ஏற்க தீர்மானித்தேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 9 ஆவது பாராளுமன்றத்தில்…
QR முறையில் விநியோகிக்க எரிபொருள் இல்லை: நிரப்பு நிலைய உரிமையாளர்கள்
பெற்றோல் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தொடரும் பட்சத்தில் அனைத்து வரிசைகளையும் ஒரு வார காலத்துக்குள் முடித்துவிட முடியும் என பெற்றோலிய பிரிவினர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறைமையின்படி வெற்றிகரமாக எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட போதிலும் 1200 எரிபொருள்…
நாட்டை கட்டியெழுப்ப மஹிந்தவின் அனுபவமும் தேவை- அமைச்சர் மஹிந்த அமரவீர
பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அனுபவமும் நாட்டின் அபிவிருத்தி பயணத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என விவசாய, வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள அனைவரதும் ஆதரவோடு ஜனாதிபதி செயற்படுவதாகவும், ஆட்சியை சிறப்பாகக் கொண்டு…
எரிபொருள் நெருக்கடியால் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையைக்…

