சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் 10% மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். பற்றாக்குறையாக உள்ள மருந்துப் பட்டியலில் அத்தியாவசிய மருந்துகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல மருந்துகள் கிடைக்காவிட்டாலும், மருத்துவமனை எந்த சிகிச்சையையும் அறுவைச் சிகிச்சையையும்…

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி சிலாபத்தில் மீனவர்கள் போராட்டம்

எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கோரி மீனவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்வதுடன், சுமார் மூன்று மாதங்களாக  வர்த்தகத்தில் ஈடுபட முடியாத நிலையில் மீனவர்கள் பலர் வீதியில் இறங்கியுள்ளனர். சிலாபத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – சிலாபம்…

கொழும்பில் ஒருவரது மாத செலவு 13,421-தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் அதிகாரபூர்வ வறுமைக் கோடு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.   ஜூன் 2022 மாதம் தொடர்பில் வெளியாகியுள்ள இந்தப் புதிய தரவுகளின்படி,தேசிய ரீதியில் ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச செலவு ரூ. 12,444…

தாய்லாந்தில் 17 குண்டு வெடிப்புகள் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள்

தெற்கு தாய்லாந்தில் இன்று 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்தின் பாதுகாப்புப் படைகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று அதிகாலையில் குண்டு வெடிப்பு மற்றும் தீ வைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும், சம்பவங்கள்…

உக்ரைனின் சிறந்த போர் விமானியை வீழ்த்திய ரஷ்யா!

உக்ரைனின் சிறந்த போர் விமானிகளில் ஒருவர் போரில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் சிறந்த போர் விமானிகளில் ஒருவர் போரில் கொல்லப்பட்டதாக நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள இவானோ-ஃபிராங்கிவ்ஸ்கில் உள்ள அவரது முன்னாள் கல்லூரியின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் வீக்கில் ஓர்  அறிக்கையின்படி,…

அதிக விலைக்கு காரணம் கூறும் பிஸ்கட் உற்பத்தியாளர்கள்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் மற்றும் பிற இனிப்பு வகைகளின் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் அதிக விலை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு காரணம் தெரிவித்துள்ளனர். டொலர் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்திக்காக ‘ஏ’ தர கோதுமை மாவை இறக்குமதி செய்ததன் விளைவாக பல உற்பத்திகளின்…

கிளிநொச்சி பெண்ணுக்கு அபுதாபியில் கிடைத்த பேரதிர்ஷ்டம்

கிளிநொச்சியிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் சென்று அகதியாகக் காலம் கடத்திய பெண் ஒருவருக்கு அபுதாபியில் லொத்தர் சீட்டில் பெருந்தொகை பரிசு கிடைத்துள்ளது.  தமிழ்நாட்டில் வசித்த அவர், திருமணத்திற்குப் பிறகு,  அபுதாபியில் வேலைக்குச் சென்றார், அங்கு வாங்கிய லொத்தர் சீட்டுக்கு ஒரு மில்லியன் அபுதாபி…

முட்டை, கோழி விற்பனை பாரியளவில் வீழ்ச்சி – பண்ணையாளர்கள்

உள்ளூர் சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பால் முட்டை மற்றும் கோழி விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விலங்குப் பண்ணையாளர்கள் ஒன்றிய அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.கால்நடைத் தீவனங்களின் விலை அதிகரிப்பால் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள்…

நுவரெலியாவுக்கு  சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு நுவரெலியாவுக்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக நுவரெலியா சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 11 முதல் 14ஆம் திகதி வரை பயணிகள் அதிகளவில் வந்ததாகவும், நீண்ட நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வராததால்…

யாழில் நாயைக் கொன்றவருக்கு ஓகஸ்ட் 29 வரை விளக்கமறியல்

யாழ்.புங்குடுதீவில் நாயை கோடரியால் வெட்டிக் கொன்ற குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த முதன்மை சந்தேகநபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.   சந்தேக நபரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு…