கனடாவில் பூர்வகுடி பெண்மணிக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம்

கனடாவின் உச்ச நீதிமன்றத்துக்கு ஒன்ராறியோ நீதிபதி மிச்செல் ஓ’போன்சாவின் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமனம் செய்துள்ளார். கனடாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதல் பூர்வகுடியினரான இவர், நாட்டின் நீதி அமைப்பின் மிக உயர்ந்த மட்டத்தில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாக கொண்டாடப்படுகிறார்.…

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் எதிர்வரும் வாரம் இலங்கை வருவர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்கள் இம்மாதம் 24 முதல் 31ஆம்  திகதிகளுக்கிடையில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதரகத் தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்…

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நேற்று(19) நள்ளிரவு முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகளை மீறி…

கண்ணீர் புகை பயன்பாட்டை நிறுத்துமாறு ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கையிடம் கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய கண்ணீர்ப்புகை பிரயோகத்தை நிறுத்துமாறு இலங்கைக்கு அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகளில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனம்…

அமைச்சுப் பதவிகளை வகிக்கத் தகுந்த பொதுஜன முன்னணி எம்.பி.களின் பட்டியல் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கத் தகுந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக ‘மவ்பிம’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சர்வ கட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக…

அவுஸ்திரேலியா இலங்கைக்கு மேலதிகமாக 25 மில். அவுஸ்திரேலிய டொலர் நன்கொடை

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இலங்கைக்கான அவசர உதவியை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலராக உயர்த்த அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவசர மனிதாபிமான ஆதரவில் ஜூன் மாதம் அவுஸ்திரேலியா 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்கியிருந்தது. இதன்படி இலங்கைக்கு மேலதிகமாக…

முட்டை விலை 5 ரூபாவால் குறைகிறது

முட்டை ஒன்றின் விலை திங்கட்கிழமை (22) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது. அடுத்த வாரத்திலிருந்து  முட்டை ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்…

வசதியுள்ளவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனி முனையம்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் பிரவேசிக்கும் அதிக வருமானம் ஈட்டும் விமான சேவைகளுக்காக ‘Gold Route’ என்ற பெயரில் புதிய சேவை முனையம் திறக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்தப் புதிய…

தினமும் ரூ.1000 செலவழித்து பாடசாலைக்கு வரும் ஆசிரியர்களுக்கும் நிவாரணம் தேவை -இலங்கை ஆசிரியர் சங்கம்

நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவழித்து பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு சில சலுகைத் திட்டம் தேவை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று(18) தெரிவித்தார். நகரின் ஒதுக்குப் புறத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் வருவதில்…

ரணில் அரசுக்கெதிராக கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ; அறுவர் கைது

அடக்குமுறையை நிறுத்து, கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய் என அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்கள் இன்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். இதில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உடனடியாக இரத்து…