ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்தும் வழமை போன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தினார். நேற்று (12) ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன்…

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தப்படும்

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக பதில் அமைச்சரவைப்…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு -சீனா அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து…

தமிழ் தரப்பினரின் ஒருமித்த அறிக்கையை ஐ.நா பேரவை கவனத்தில் கொண்டுள்ளது: சுரேந்திரன் குருசுவாமி அறிக்கை

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில், ஒருமித்த நிலையில் தமிழ் தரப்பினர் அறிக்கை சமர்ப்பித்ததை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில்…

அத்தியாவசிய மருந்துகளை கொள்முதல் செய்வதற்க்கு நிதியை வழங்க தீர்மானம்

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கொள்வனவிற்காக, ஏனைய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர் நிதியை சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆசிய…

ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட…

யாழ்ப்பாணத்தில் ஜோடியாக குடைகளுக்குள் செல்வதால் கலாசார சீர்கேடு என்கிறார் யாழ். மாநகர சபை உறுப்பினர் !

யாழ். ஆரியகுளமானது தற்போது கொழும்பு காலிமுகத்திடலை விட மிக மோசமான அளவிற்கு சென்று கொண்டிருப்பதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்துள்ளார். ஆரியகுளத்து சூழலில் ஜோடியாக குடைகளுடன் சென்று பொழுத்தினை கழிக்க அனுமதிக்கின்றார்கள், இது ஒரு கலாசார சீர்கேட்டிற்கு ஆரம்பமாகும்.…

தமிதா அபேரத்னவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமித்தா அபேரத்னவிற்கு இன்று(12) பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று(12) உத்தரவிட்டார். கடந்த 07ஆம் திகதி பத்தரமுல்லை – தியத்த…

பான் எடையை குறைத்து ரூ.190க்கு விற்க நடவடிக்கை

நிர்ணயிக்கப்பட்ட  நிறையை குறைத்து பாணை 190 ரூபாவிற்கு விற்பனை செய்ய பேக்கரி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. 300 கிராம் அல்லது 350 கிராம் வரை பாணின் நிறையை குறைத்து விற்பனை செய்யவுள்ளதாக அகில…

சமந்தா பவர் விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளார்

நாட்டின் விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இன்றைய தினம் ஜா எல…