முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோக சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் திங்கட்கிழமை  (19) முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோக சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச பொது விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குடிவரவு திணைக்களத்தின் தலைமை…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அறிவித்தல் அனுப்புமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொழும்பு கொச்சிக்கடை…

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின்மனைவிக்குபிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவியான சியாமலி குணவர்தன மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் இந்திக புஷ்பகுமார ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல்…

சர்வதேச அணுகுமுறையைக் கோரும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ஸ குடும்பத்தின் மோசமான ஆட்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண விரிவான சர்வதேச அணுகுமுறையைக் கோரும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அமெரிக்க…

தாமரைக் கோபுரம் இன்று(15) முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது

தெற்காசியாவின் மிக உயரமான கட்டடமாகக் கருதப்படும் தாமரைக் கோபுரம் இன்று(15) முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது. தாமரைக் கோபுரத்தை திறக்கும் முதல் கட்டம் இதுவாகும். இரண்டாம் கட்ட செயற்பாடுகள் இன்னும் 2 மாதங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் மூன்றாம் கட்ட திறப்பு விழாவை அடுத்த…

பாராளுமன்றத்தைப் பொதுமக்கள் பார்வையிட இதுவரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன

நிலவிய கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் நேற்று  (14) அனுமதிக்கப்பட்டது. இதற்கமைய முதற்கட்டமாக பாராளுமன்ற அமர்வு தினங்கள் தவிர்ந்த ஏனைய…

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 08 பேர் தலைமன்னார் – பேசாலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு(13) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 3 இளைஞர்களும் 2 பெண்களும்…

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களிற்கான வீடுகள் கையளிப்பு

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடனும் கூடிய நிரந்தர வீடுகளைக் கொண்ட மறுவாழ்வு முகாம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.  இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்துள்ளார்.  இந்த நிரந்தர…

மன்னாரை கருவாடு காய வைக்கும் இடம் என குறிப்பிட்ட டயானாவின் கருத்து தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் அதிருப்தி!

மன்னார் மாவட்டத்திற்கு என தனித்துவமான கலை கலாச்சாரம் உண்டு. எனினும் மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக் குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எவ்வித அருகதையும் இல்லை எனவும், அவரது கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஒத்திவைப்பு

30 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற வகையில் சம்பாதித்தமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 05 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி…