அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage (LPD-23) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage (LPD-23) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.  இரு நாடுகளுக்கும் இடையிலான 2023 ஆம் ஆண்டுக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக இந்த கப்பல் நாட்டிற்கு வருகை தந்துள்ளது.  இலங்கை கடற்படையின் SLNS Gajabahu மற்றும்…

கடை ஒன்றை சேதப்படுத்தி, அதன் உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் – கல்வியன்காடு பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றை சேதப்படுத்தி, அதன் உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நேற்று (18) இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.  உரிமையாளர் கடையை மூடுவதற்கு தயாரான நேரத்தில் வாள்…

தவத்திரு வேலன்சுவாமிகள் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

சட்டவிரோத ஒன்றுகூடலில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தவத்திரு வேலன் சுவாமிகள் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழா நடைபெற்ற சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமிகள் பங்கேற்றிருந்தார்.…

சீனாவை குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் அமெரிக்க தூதுவர் சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்(Julie J. Chung) அண்மையில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்த கருத்திற்கு இலங்கைக்கான சீன தூதரகம் பதிலளித்துள்ளது. சீனாவை குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் அமெரிக்க தூதுவர் சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சீன…

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு திபேத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு திபேத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் மல்வத்து மகாநாயக்க தேரர் திம்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்த இலங்கையின் பதில் சீன தூதுவர் Hu Wei இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

உள்ளூராட்சி மன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய, உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு

 உள்ளூராட்சி மன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய, உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்திற்கு இன்று(18) மீண்டும் உறுதியளித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உயர் நீதிமன்றத்தில் இந்த…

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் ஆய்வு பிரிவில் கல்விகற்கும் மாணவி ஒருவர் இன்று நண்பகல் கழுத்து வெட்டி கொலை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் ஆய்வு பிரிவில் கல்விகற்கும் மாணவி ஒருவர் இன்று நண்பகல் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குதிரைப்பந்தயத் திடலுக்கு அருகே இந்த கொலை இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான புதிய அரசாங்க அதிபர்கள்

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான புதிய அரசாங்க அதிபர்கள் இன்று பிரதமரிடம் தமக்கான நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இன்று…

QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது,…

 உண்மையைக் கண்டறிதல் மற்றும் மீளிணக்க பொறிமுறை

உண்மையைக் கண்டறிதல் மற்றும் மீளிணக்க பொறிமுறை தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  யுத்தத்தின் பின்னர் சமாதானத்தை பாதுகாப்பதற்காக அர்த்தமுள்ள வழிமுறையாக உண்மையைக் கண்டறியும் சுயாதீனமான, உள்ளூர் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளதாக…