வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் முடிவு

புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக்…

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல்

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். Reported by:Maria.S

அரசாங்கம் மனித உரிமைகளை நசுக்குவதாக குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் அதிக வரி மற்றும் அதிக மின் கட்டணத்தை பிரப்பித்து சாதாரண மக்களுக்கு சுமையை ஏற்ப்படுத்தி முயற்சியாண்மையாளர்களைக் கூட நிர்க்கதிக்கு ஆளாக்குவதாகவும், அதுமட்டுமல்லாமல், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முன்வைத்து, துன்பப்படும் மக்கள் தமது கோரிக்கைகளுக்காக குரல் எழுப்பும் போது, அவர்களை…

எரிவாயுவின் விலை பாரிய அளவில் குறைப்பு

நாளை (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை சுமார் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை நாளை காலை அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத்…

நாளை முதல் பாடசாலை விடுமுறை

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான  இரண்டாம் கட்டம்…

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அலரிமாளிகையில்…

ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் நிதி கிடைத்தால் 25 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தலாம்: தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலுக்குத் தேவையான நிதி பெற்றுக்கொடுக்கப்படுமாயின், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.  ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு…

IMF கடன் வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுவதை கண்காணிக்க குழு நியமிக்கப்படவுள்ளது

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன், பயன்படுத்தப்படும் விதம் தொடர்பில் கண்காணிப்பதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார்.  ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்…

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை இன்று (01) முதல் குறைக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.  இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மா விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா விலை 80 ரூபாவினாலும்…

யாழ்ப்பாணம், இடைக்காட்டு பகுதியில் சொகுசு காரில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்திச் சென்ற இளைஞன் ஒருவனை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், இடைக்காட்டு பகுதியில் சொகுசு காரில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்திச் சென்ற இளைஞன் ஒருவனை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (30) மாலை தொண்டைமானாறு இடைக்காட்டு பகுதியில் இருந்து சுன்னாகத்திற்கு போதைப்பொருளை கடத்திச் செல்லும் போது…