குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள மாணவருக்கு கைத்தொலைபேசிகள் : அமைச்சர் பீரிஸ்

தூரப் பிரதேசங்களில் அல்லது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இலகுவாக பணம் செலுத்தும் அடிப்படையில் ஸ்மாட்போன்கள் வாங்குவதற்கான விரைவான வழிமுறையை அறிமுகப்படுத்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றில் நேற்று(22) தெரிவித்தார்.…

விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் 3ஆம் அலையைக் கட்டுப்படுத்தலாம் : சுகாதார அமைச்சர்

அதிகாரிகள் மற்றும் நாட்டு மக்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் கொவிட்-19 மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று தெரிவித்தார்.   கொவிட் தடுப்பு செயலணி விதித்த சுகாதார வழிகாட்டல்களை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க…

கொரோனா பெருந்தொற்றால் ஒரே நாளில் 71 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிநேற்றுமுன்தினம் மாத்திரம் 71 பேர் உயிரிழந்துள்ளனர். 38 பெண்களும், 33 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து நாட்டில் இதுவரை கொரோனாத்…

சிறைகளிலுள்ள முன்னாள் போராளிகளுக்கு நீதி வழங்க வேண்டும் : அமைச்சர் நாமல்

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு  நீதி கிடைக்க வேண்டும். அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை  துரிதப்படுத்த வேண்டுமென  இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக் ஷ சபையில் வலியுறுத்தினார். நேற்று…

யாழில் அதிகரிக்கும் குழந்தைத் தொற்றாளர்கள்

யாழ்ப்பாணத்தில் 49 நாள் சிசு உட்பட 9 சிறுவர்கள் நேற்று மட்டும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இந்த விடயம் வெளியானது. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில்…

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Reported by : Sisil.L

கொரோனா 3ஆவது அலையால் நாட்டில் 2024 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை 2024 பேர் பலியாகினர் என்று கொரோனாத் தடுப்புச் செயற்பாட்டு மையம் வெளியிட்டிருந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.நாட்டில் கொரோனாவின் முதலாவது அலையில் 13 மரணங்களும், இரண்டாவது அலையில்…

முச்சக்கர வண்டிக் கட்டணம் கி.மீ/50 ரூபா வரை அதிகரிக்கும் சாத்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பால் ஒரு கிலோமீற்றருக்கு 50 ரூபா கட்டணம் அறவிடப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுதில் தில்ருக் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.   கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகள் கடந்த 10…

யோகா பயிற்சியில் பிரதமரும் பாரியாரும்

நேற்று சர்வதேச யோகா தினம் என்பதால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார்  ஷிரந்தி ராஜபக் ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்று, இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக யோகாவை மாற்று…

அதிகாலை முதல் காத்திருந்த மதுப்பிரியர்கள்

கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்றுக் காலை பயணத்தடை தளர்த்தப்பட்டது.அத்தோடு, மதுபான நிலையங்கள் நேற்று முதல் திறக்கப்படுவதாகவும் மதுவரித் திணைக்களம் அறிவித்தது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் பயணத் தடை தளர்த்தப்பட்டதும் தொழிலுக்குச் சென்று…