தமது தந்தையை விடுதலை செய்யுமாறு ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் அமைச்சர் நாமலிடம் கோரிக்கை

நாங்கள் அப்பாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றோம். சிறையில் வாடும் எங்கள் அப்பாவை உடனடியாக  பொது மன்னிப்பின் கீழ் விடுதலை  செய்யுங்கள்.” என தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கண்ணீர் மல்க நேரில் கோரினர். யாழ். வடமராட்சியின்…

இந்தோனேசியாவில் சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்களுக்கு கொரோனா!

இந்தோனேசியாவில் கடந்த 2 வார காலத்தில் மட்டும் 358 மருத்துவர்கள் தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் சினோவேக் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள். இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்நாட்டில் 20 ஆயிரம் பேருக்கு தொற்று…

3 நாட்களில் 70 கோடி ரூபாவுக்கு குடித்துத்தள்ளிய மதுப்பிரியர்கள்

இலங்கையில் 3 நாட்களில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரைவாசிக்கும் குறைவான மதுபான விற்பனை நிலையங் களைத் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்  70 கோடி ரூபாவுக்கு விற்பனை இடம்பெற்றுள்ளது என மதுவரித் திணைக்களம்…

மாகாணங்களிடையே பொதுப் போக்குவரத்துஅடுத்த வாரமும் இல்லை : அமைச்சர் அமுனுகம

கொவிட்-19 தொற்று நோய் நிலைமை காரணமாக பொதுப் போக்குவரத்து சேவைகளை அடுத்த வாரமும் மாகாணங்களுக்கு இடையே அனுமதிக்க முடியாது என்று கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணி அறிவித்துள்ளது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதன்படி, பஸ் மற்றும் ரயில்…

டெல்டா வைரஸ் இலங்கை முழுதும் பரவும் ஆபத்து: மருத்துவர் ஹேமந்த ஹேரத்

டெல்டா திரிபு குறித்து கவனயீனத்துடன் செயற்பட்டால், அது இலங்கை முழுவதும் பரவும் அபாயம் ஏற்படக்கூடும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.  நீண்ட பரிசோதனைகளுக்கு அமையவே, வைரஸ் திரிபுகளை வெவ்வேறாக அடையாளம் காண முடியும். இந்தியாவில், முதல்முறையாக டெல்டா திரிபு…

கொரோனாவால் யாழில் மேலும் ஐவர் பலி!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகள் ஐவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று முன் தினம் இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும் நேற்று மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24 வயதுடைய ஆண்…

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு திடீர் உடல் நல பாதிப்பு

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு நேற்றைய தினம் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் இன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள் பலர் மயக்கமடைந்ததாகவும் பின் அவர்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது. இதேவேளை குறித்த ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டு ஊழியர்கள்  வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய…

யாழ்.ஊர்காவற்றுறையில் கொவிட்-19 இடர் நிவாரணம்

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட யாழ். ஊர்காவற்றுறை  ஜே/50, ஜே/56, கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பருத்தியடைப்பு, தம்பாட்டி பிரதேச மக்களுக்கு வெளிநாடு வாழ் நலன்விரும்பிகளின் நிதி உதவியில் உலர் உணவு நிவாரணப் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. —————- Reported by :…

யாழ்.நல்லூரில் விடுதி முற்றுகை ; இரு பெண்கள் உட்பட அறுவர் கைது

யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் கலாசாரச் சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றன என்று கூறப்படும் விடுதி ஒன்று யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று முற்றுகையிடப்பட்டது. இதன்போது, குறித்த விடுதி யிலிருந்து இரண்டு பெண் கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்…

டெல்டா வைரஸ் சமூகத்துக்குள் பரவவில்லை : சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

டெல்டா வைரஸ் சமூகத்துக்குள் பரவியுள்ளது என்பதற்கான  எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள  ஐவர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மருத்துவர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார். மாதிரிகளின் மரபணு வரிசை முறையை ஆராய்ந்து…