வடக்கில் 69 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்

பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் 48 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 69 தொற்றாளர்கள் புதிதாக நேற்று அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ். போதனா மருத்துவமனை ஆய்வு கூடங்கள் மற்றும் பருத்தித்துறை நகரத் தில் நடத்தப்பட்ட எழுமாறான அன்ரிஜென்…

பருத்தித்துறை நகரம் நேற்றுடன் முடக்கப்பட்டது

பருத்தித்துறை நகரத்தின் இதயப் பகுதி என அழைக்கப்படும் – ஜே 401 கிராமசேவகர் பகுதி நேற்று மாலை முதல் முடக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நேற்றும் – நேற்று முன்தினமும் மட்டும் 35 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பலர் அதனை…

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் முதன்முறையாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சை!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மற்றும் குழுவின் ஆலோசகர் மருத்துவர் சுதர்சனால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.…

போதைப்பொருள் பாவனை – வியாபாரத்துக்கு எதிராக வீதிகளில் இறங்கிய மக்கள்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் அதிகரித்துள்ள போதை வியாபாரம், போதைப் பாவனையைக் கட்டுப்படுத்தக் கோரி பிறைந்துறைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் இன்று (15) ஈடுபட்டனர். பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டக்காரர்கள் நடை பவனியாக…

விஹாரமகாதேவி பூங்காவில் கொவிட் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை

கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.————— Reported by : Sisil.L

கைத்தொலைபேசி பயன்பாடு சிறுவர்களின் நினைவாற்றலை குறைக்கிறது : மனநல மருத்துவர்

கைத்தொலைபேசிகள் மற்றும் கணினிகளை  நீண்டகாலமாக சிறுவர்கள் பயன்படுத்துவது தூக்கமின்மை மற்றும் நினைவாற்றல் குறைபாட்டுக்ககு வழிவகுக்கின்றது என மனநல மருத்துவர் நீல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதைக் கூறினார்.  தூக்கமின்மை அவர்களின் நினைவாற்றலைக்…

யாழில் நேற்று கொரோனாவால் இருவர் உயிரிழப்பு

யாழ்.குடாநாட்டில் நேற்று இருவர் கொவிட்-19 தொற்றால் மரணமாகினர்.  யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவரும், நவாலியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 63 வயது…

பருத்தித்துறையில் 51 பேர் உட்பட வடக்கில் 103 கொவிட் தொற்றாளர்கள்

பருத்தித்துறையில் 51 பேர் உட்பட யாழ். மாவட்டத்தில் 91 பேருடன், வடக்கில் 103 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனைகளிலேயே இந்தத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். யாழ். பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூட…

நேற்று அதிகூடிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன : அமைச்சர் ஜயசுமண

இலங்கையில்  நேற்று(13) அதிகூடிய கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது. நேற்று மொத்தமாக  337,445 பேர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். இதன்படி சினோபார்ம் முதல் டோஸ் 289,122 பேருக்கும் இரண்டாம் டோஸ் 32,385 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.…

எக்ஸ்பிரஸ் பேர்ள் பாதிப்புக்காக இலங்கைக்கு 3.6 மில்லியன் டொலர் இழப்பீடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றிய அனர்த்தத்தினால் இலங்கைக்கு ஏற்பட்ட  சுற்றுச்சூழல் பாதிப்புக்காக 3.6 மில்லியன் டொலர் இழப்பீடு கிடைத்துள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.   இந்நிதியில் 2 மில்லியன் டொலர் மீனவர்களுக்கு வழங்கப்படும் எனவும்  மீதித்தொகையில் ஒரு…