279 அடி உயரமுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்த யுவதியைத் தேடுவதற்காக திம்புல-பத்தன பொலிஸார் இன்று காலை முதல் விஷேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.நான்கு இளம் பெண்கள் நேற்று(18) டெவோன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்குச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து…
Category: SRI LANKA 1
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம் : ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இன்று ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.—————————- Reported by : Sisil.L
இலங்கையில் டெல்டா வைரஸ் தீவிரமடையும் ஆபத்து: சன்ன ஜயசுமண
இலங்கையில் ‘டெல்டா’ வைரஸ் தொற்று தீவிரமடையும் ஆபத்து உள்ளது.” இவ்வாறு மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸின் பல வகையான மாறுபாடுகள் பரவி வருகின்றன என்றும் அவர்…
பிரபாகரனின் திரைப்படத்தை தரவிறக்கிய இருவர் கைது
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட ‘மேதகு” தமிழ்த் திரைப்படத்தை இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில், நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா,…
மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் மாயம்
புத்தளம் கற்பிட்டி பகுதியிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் நேற்று மாலை கரை திரும்பவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த மீனவர்கள் கடந்த 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை கற்பிட்டியிலிருந்து படகில் மீன் பிடிக்கச் சென்றனர். இந்த…
மேலும் 46 பேர் கொரோனாவால் மரணம்
நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா தொற்றால் மரணித்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையில் நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா தொற்றால் மரணித்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள்…
ஜெர்மனி, பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு; உயிரிழப்பு 170 ஆக உயர்வு
ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதேபோல் பெல்ஜியத்திலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில்…
ஆட்சியைக் கவிழ்க்கவே நாட்டில் போராட்ட அலை: அமைச்சர் சரத் வீரசேகர
அரசின் வேலைத்திட்டங்களைக் குழப்பி ஆட்சியைக் கவிழ்க்கும் குறுகிய நோக்கத்தின் அடிப்படையிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாணந்துறைப் பகுதியில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்…
இரண்டு தடுப்பூசிகள் ஏற்றினாலும் டெல்டா தொற்று பரவும்
தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் டெல்டா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தற்போது இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களும் தொற்றுக்குள்ளாகும் நிலைமை காணப்படுவதாகவும் அந்தப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் சுட்டிக்காட்டினார்.ஆகவே மக்கள் அனைவரும்…
கொரோனாவால் மேலும் 31 பேர் பலி
நாட்டில் மேலும் 31 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ——————————-Reported by : Sisil.L

