கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உயிரிழந்த 75 வயதுடைய அழகம்மா என்ற பெண் மற்றும் 47 வயதுடைய விஜயகுமார் ஆகிய இருவரின் மாதிரிகள் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன. அவற்றின் முடிவுகள் நேற்று வெளியாகின.…
Category: SRI LANKA 1
நாட்டில் மேலும் 160 பேர் கொரோனாவால் பலி
இலங்கையில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார். நாட்டில் ஒரு நாளில் பதிவான அதிக மரணங்களின் முன்னைய எண்ணிக்கையைக் கடந்து நேற்று முன்தினம் அதிக மரணங்கள் பதிவாகின.இவற்றுடன்…
சொந்த அரசியல் நலனுக்காக அரசாங்கம் செயற்படுகிறது – சஜித்
கொரோனா தொற்றுப் பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் உள்ள நிலையில், தற்போதைய கொரோனா தொற்று நிலையைப் புறக்கணிக்கும் நாட்டின் தலைவர்களின் செயலால் தான் மனம் தளர்ந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் சுகாதாரப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட…
இந்தியாவிலிருந்து 100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அரசு தீர்மானம்
கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவென அடுத்த வாரம் 100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை அதை இந்தியாவிடமிருந்து வாங்கும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.கொவிட் தொற்றாளர்கள் அதிவேகமாக அதிகரிப்பதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளுக்கும்…
யாழில் மேலும் ஐவர் கொரோனாவால் பலி
யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மேலும் 5 பேர் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த 78 வயது பெண் ஒருவரும் கொழும்புத்துறையைச் சேர்ந்த 79 வயது நபர் ஒருவரும்,…
நாட்டை உடன் முடக்காவிடின் கொரோனா படுகொலையே அரங்கேறும்: பேராசிரியர் சுனெத் அகம்பொடி
இலங்கையை உடன் முடக்கிக் கொரோனா மரணங்களைத் தடுக்கத் தவறும் பட்சத்தில் நாட்டில் கொரோனாப் படுகொலையே இடம்பெறும் என்று சமூக மருத்துவத்துறை விசேட நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம்பொடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயத்தில் இப்போது தீர்மானம் எடுக்காது பொறுப்பை தட்டிக்கழிப்பதும், அதன்…
நல்லூர் ஆலயக் கொடியேற்றம் இன்றாகும்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று காலை இடம்பெற்றது. கொவிட்19 தீவிரத்தின் மத்தியிலும் பக்தர்கள் பலர் ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர்.———————— Reported by : Sisil.L
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு துரித பிசிஆர் சோதனை: ஜனாதிபதி அறிவுரை
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிய பிசிஆர் சோதனைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி கோத்தபாய நேற்று அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றால் இறக்கும் பெரும்பாலான மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால்…
யாழில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுப்பிட்டியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.நேற்று முன்தினம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 75 வயது…
இலங்கையில் மேலும் 156 கொரோனா மரணங்கள்
நாட்டில் நேற்று முன்தினம் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 156 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டது.அண்மை நாட்களாக கொரோனா மரணங்கள் 100ஐ கடந்து வந்தன. இந்த நிலையில் திடீர் அதிகரிப்பாக 150ஐ கடந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.…

