தடுப்பூசி பெறாதவர்களைத் தேடி வீடுவீடாக பிரசாரம் முன்னெடுப்பு

கொவிட்-19 தடுப்பூசியை இதுவரை பெறாதவர்களைத் தேடி பொலிஸாரால் வீடு வீடாக பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டம் நேற்று(16) கொழும்பு மாவட்டத்தில் தொடங்கப்பட்டது என ஆரம்ப சுகாதார பராமரிப்பு தொற்றுநோயியல் துறை விஷேட அமைச்சர் மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.  கோவிட்…

இலங்கையில் மேலும் 167 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

நாட்டில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை 167 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6ஆயிரத்து 263ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் ஒரே நாளில் கொவிட்-19…

யாழில் மேலும் நால்வர் கொரோனாவுக்குப் பலி

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை மேலும் நால்வர்கோவிட்-19 நோயினால் உயிரிழந்தனர்.யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தஅச்சுவேலியைச் சேர்ந்த 85 வயது டைய ஆண் ஒருவரும்பருத்தித்துறையைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.…

கொடிகாமம் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது

கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் கொடிகாமம் பொதுச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 17 தொற்றாளர்கள் கொடிகாமம் சந்தைத் தொகுதியில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன் தொடராக நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோனையில்…

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார், கல்வியமைச்சராக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெலவையும் போக்குவரத்து துறை அமைச்சராக பவித்திரா வன்னியாராச்சியையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.  எரிசக்தி அமைச்சர் பதவியிலிருந்து உதயகம்மன்பிலவை…

அத்தியாவசியத் தேவைகளைத் தவிர கொழும்புக்கு வர வேண்டாம்: கொழும்பு மேயர்

கொவிட் தொற்று வேகமாகப் பரவி வருவதால் அவசரத் தேவை தவிர கொழும்பு நகருக்கு வருவதைத் தவிர்க்குமாறு கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நாட்களில் கொழும்பு நகருக்கு வருவது அவர்களின் உயிருக்கு ஆபத்தானது என்பதால் பல தடவை…

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கத் திட்டம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார். அம்பாந்தோட்டை…

டெல்டா உள்ளிட்ட புதிய வைரஸ்கள் எதிர்வரும் நாட்களில் தீவிரமடையும்: மருத்துவர் சன்ன ஜயசுமண

இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும். அதே வேளை,  டெல்டா வைரஸ் மாத்திரமின்றி ஏனைய புதிய நிலைமாறிய வைரஸ்கள் தோன்றக்கூடிய ஆபத்துகளும் காணப்படுகின்றன.” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று ஊடகங்களுக்குக்…

யாழில் 70 பேர் உட்பட வடக்கில் நேற்று 104 தொற்றாளர்கள்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று 581 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 104 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெல்லிப்பழை மருத்துவ அதிகாரி பிரிவில்  26 பேரும், வேலணை மருத்துவ அதிகாரி பிரி வில் 14 பேரும், யாழ்.…

காணாமல் போன பலர் வெளிநாடுகளில் உள்ளனர்: அமைச்சர் தினேஷ் குணவர்தன

இலங்கையில் போரின் போது காணாமல்போனதாக கூறப்படுவோரில் பலர் வேறு பெயர்களில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன எனவெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட போரின்போது அவர்கள் முறையற்ற வழிகளின் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்று…