கிளிநொச்சி சந்தையும் நேற்று முதல் முடக்கப்பட்டது

கிளிநொச்சி சேவை சந்தை நேற்று முதல் மூடப்பட்டுள்ள நிலையில் வர்த்தகச் செயல்பாடுகள் வெளி இடங்களில் இடம்பெறுகின்றன.கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள கிளிநொச்சி சேவைச் சந்தையில் 500க்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.மாவட்டத்தில் அதிவேகமாக பரவி வரும் கொவிட் பரவல்…

இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கொரோனாவுடன் வாழ நேரிடும் : சாகர காரியவசம் எம்.பி.

இன்னும் 2 வருடங்களாவது கொரோனாவுடன்தான் வாழ வேண்டி வருமென மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மக்களைக் காப்பதற்கு உள்ள ஒரே வழி தடுப்பூசிதான். அதனை வழங்கும் நடவடிக்கையை அரசு துரிதப்படுத்தியுள்ளது. எனினும், சிற்சில தவறுகளை பெரிதுபடுத்தி மக்களை குழப்புவதற்கு எதிரணி…

கொரோனா மரணங்கள் வடக்கில் 250ஐக் கடந்தது

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொற்றாளி ஒருவர் நேற்று மரணமானார். இதையடுத்து, வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது.யாழ்ப்பாணம் – கனகரத்தினம் வீதியைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இதேவேளை,…

கொழும்பு மாவட்டத்தில் டெல்டா தொற்று தீவிரம்

கொழும்பு மாவட்டத்தில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 90 சதவீதமானோர் டெல்டா தொற்றாளர்கள் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதேவேளை நாட்டில்…

சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் பொது முடக்கம் விதிக்கப்படும் : அரசாங்கம்

சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை மூடும் முடிவை எட்ட தயங்க மாட்டோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டை மூடக்கூடாது என்ற பிடிவாதமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித் துள்ளார். இன்று…

இந்த ஆட்சி இப்படியே தொடருமானால் ஆப்கான் நிலைமை இங்கும் ஏற்படும் – சாணக்கியன் எம்.பி.

இப்படியே இந்த ஆட்சி தொடருமாக இருந்தால் ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் மக்கள் விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்கு தப்பியோடுவதனைப்  போன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  எம்.பி.  இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற…

வடக்கு, கிழக்கில் தொற்றாளர்களால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்: சபையில் சிறிதரன் எம்.பி.

வடக்கு, கிழக்கில் அனைத்து வைத்தியசாலைகளும் கொரோனாத் தொற்றாளர்களால் நிரம்பி வழிகின்றன என்று தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக  ஏற்பாடுகள் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு…

யாழில் நேற்று மூவர் கொரோனாவால் பலி

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் மூவர்  கொவிட்-19 நோயால் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புத்தூர் கிழக்கைச்  சேர்ந்த 62 வயது ஆண் ஒருவரும், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 57 வயது ஆண் ஒருவரும், பருத்தித்துறையைச் சேர்ந்த…

இலங்கையில் மேலும் 171 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 171 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.  இதுவே இதுவரை ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கையாகும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த…

ஜோக்கிம் பெர்னாண்டோ இயற்கை எய்தினார்

இலங்கை வானொலியின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோ இன்று நண்பகல் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1967ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் பணியாற்ற ஆரம்பித்த அன்னார் தலைசிறந்த நாடகக் கலைஞராக பரிணமித்தமை குறிப்பிடத்தக்கது. ——————-   Reported by : Sisil.L