யாழில் கொரோனாவால் மூவர் பலி

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் நேற்று மூன்று பேர் உயிரிழந்தனர் என்று யாழ். போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 83 வயது பெண், ஓட்டுமடத்தைச் சேர்ந்த 73 வயது ஆண், மானிப்பாயில் வசித்து…

ஒட்சிசனுடன் கொழும்பு துறைமுகம் வந்தடைந்த ‘சக்தி’

இலங்கை கடற்படைக் கப்பலான சக்தி இந்தியாவிலிருந்து 40 தொன் மருத்துவ  ஒட்சிசனை சுமந்தவாறு இன்று(23) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களை இறக்கியவுடன் குறித்த கப்பல் நாளை மீண்டும் மற்றுமொரு தொகுதி மருத்துவ ஒட்சிசனைக் கொண்டுவர  சென்னை துறைமுகம்…

இரத்த சேமிப்பு குறைவதால் இரத்த வங்கிக்கு சிக்கல்!

இரத்த சேமிப்பின் அளவு பாதுகாப்பான  அளவை விடக் குறைந்துள்ளதாக இரத்த மாற்று நிலையத்தின் தலைவர் மருத்துவர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்தார். இரத்த சேமிப்பின் அளவு  குறைவதால்  இரத்த மாற்ற நிலையம் பல  வாரங்களாக ஆபத்தான நிலையில் உள்ளது.  டெல்டா கொவிட் பரவலாலும்…

கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர நாட்டை மூடுவது தீர்வாகாது: சாகர காரியவசம் எம்.பி.

நாட்டை மூடவேண்டியிருப்பது வருத்தமளிக்கிறது. இதனால் நாளாந்த ஊதியம் பெறுவோர் மிகவும் பாதிக்கப்படுவதாக  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கூறினார்.ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய அவர், நாடு மூடப்பட்டுள்ளதால் மாதாந்த சம்பளம் பெறுவோர் பெரும் பிரச்சினையை எதிர்கொள்ளவில்லை…

இலங்கையில் 107 ஆண்கள் உட்பட மேலும் 183 பேர் மரணம்

நாட்டில் மேலும் 183 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் இவ்வாறு மரணித்தவர்களில் 107ஆண்களும், 76 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.  இதில் இரண்டு பெண்கள் 30 வயதுக்குட்பட்டவர். 27 ஆண்கள், 18 பெண்கள்…

வேன் – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளும் டொல்பின் ரக வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர்படுகாயமடைந்தார். இந்த விபத்து நேற்று மாலை கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற் றுள்ளது.தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டொல்பின் ரக வேன் ஒன்றும்…

மேல் மாகாணத்தில் வேகமாகப் பரவுகின்றது டெல்டா

மேல்மாகாணத்தில் டெல்டா கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்றது என பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.இலங்கையில் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் நான்கு பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூகத்தில் வேகமாகப் பரவும் டெல்டா கொரோனா வைரஸ் காரணமாக நான்கு பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளன…

2 வாரங்களுக்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் மரண வீதத்திலும் குறைவு ஏற்படாது: உபுல் ரோஹண

நாடு தற்போது முடக்கப்பட்டிருந்தாலும் இன்னும் 14 நாட்களுக்குக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண எண்ணிக்கையில் குறைவு இருக்காது.இவ்வாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாடு 10 நாட்களுக்கு…

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 7 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரே நாளில் நேற்று முன்தினம் 198 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் ஒரே நாளில் அதிக அளவானோர்…

யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற 21 பேருக்கு தொற்று

யாழ். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண் டாவில் எம்.எஸ். லேன் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அண்மையில் இடம்பெற்ற இந்த விழாவில் பங்கேற்ற சிலருக்குக் கொரோனாத் தொற்று அறிகுறிகள்…