ஆதிவாசிகளின் கிராமத்தில் கொரோனா; தலைவரின் மனைவிக்கும் பாதிப்பு

கடந்த 28ஆம் திகதி ஆதிவாசி கிராமமான தம்பானவில் 115 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜென் பரிசோதனைகளில் 44 பேருக்கு கொவிட் தொற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஹியங்கனை மருத்துவ சுகாதார அதிகாரி தெரிவித்தார். இந்தத் துரித அன்டிஜென்  சோதனை ஆதிவாசி கிராமங்களிலுள்ள சாதாரண மக்கள்…

காட்போட் பிரேதப் பெட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிப்பதால் காட்போட்டினால் செய்யப்பட்ட பிரேதப் பெட்டிகளுக்கு பெரும் தேவை காணப்படுவதாக தெகிவளை மவுண்ட்லவேனியாவின் மாநகரசபை உறுப்பினர் பிரியந்த சகாபந்து தெரிவித்துள்ளார். கார்ட்போட் பிரேதப் பெட்டிகளை தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்தவர்களில் முன்னோடியான பிரியந்த சகாபந்து பல பிரதேச…

யாழில் நேற்று ஐவர் கொரோனாவால் பலி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உட்பட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர்.  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும், நெல்லியடியைச் சேர்ந்த…

இலங்கையில் மேலும் 192 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இலங்கையில் மேலும் 192 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் உயிரிழந்ததாக நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த…

அமெரிக்காவில் மானுக்கும் கொவிட் தொற்று!

கொவிட் வைரஸ் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. உலகில் முதல் முறையாக மான் ஒன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.  வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின் படி கொவிட் தாக்கிய விலங்குகள் பட்டியல் விரிவடைந்துள்ளது.அதன்படி ஒஹையோ காடுகளில் வெள்ளை வால் மான்…

யாழில் மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  மூவர் உட்பட மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக் கோட்டையைச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் அரசடி வீதியைச்…

யாழில் இடம்பெயர்ந்து மீளக்குடியமராதோர் பதிவு செய்ய வேண்டுகோள்

யாழ். மாவட்டத்தில் மோதல்களினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமராத மக்கள் தங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் மீள க்குடியமராத குடும்பங்களின்…

டெல்டா உச்சமடைந்தால் தாங்க முடியாத பேரழிவு : பேராசிரியர் மனுஜ் சி. வீரசிங்க

இலங்கையில் கொரோனா வைரஸின் திரிபான டெல்டா வைரஸ் தனது கோரத் தாண்டவத்தின் ஆரம்ப கட்டத்தைத்தான் இப்போது காட்டியுள்ளது. இது உச்சக்கட்டத்தை எட்டும்போது அது தாங்க முடியாத பேரழிவைத் தரும்.”  என எச்சரிக்கை விடுத்துள்ளார் கொழும்பு பல்கலைக் கழகத்தின் சமூக மருத்துவத்துறையின் தலைவர்…

இலங்கையில் மேலும் 212 பேர் கொவிட் தொற்றுக்குப் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 212 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 103 பெண்களும், 109 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். இதில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் 30 வயதுக்குட்பட்ட வர்களாவர். 20…

இலங்கையில் கொவிட் டெல்டா திரிபு 292 பேரிடம் அடையாளம்

இலங்கையில் கொவிட்-19 டெல்டா திரிபு 292 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு செல் உயிரியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. டெல்டா திரிபின் விரைவான பரவல் கொழும்புக்குள் ஏற்பட்டுள்ளதுடன் இதுவரை டெல்டா வகையின் நான்கு பிறழ்வுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன.…