உள்நாட்டு துப்பாக்கிகள், 200 ரவைகளுடன் இராணுவ சிப்பாய் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 200  T 56 ரக துப்பாக்கி ரவைகளுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கண்டி – ஹதரலியத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடம் இருந்து 2 டெட்டனேட்டர்கள்,…

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக திருகோணமலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத மீன்பிடி முறைகளை நிறுத்துமாறு கோரி திருகோணமலை மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை – சிறிமாபுரவிலிருந்து பேரணியாகச் சென்ற மீனவர்கள் திருகோணமலை நகரம் ஊடாக மீன்பிடி மற்றும் நீரியல்வள திணைக்களம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3…

அகிலம் போற்றும் யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா

வரலாற்று பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப் பெருமானின் இரதோற்சவம் இன்று(13) நடைபெறுகின்றது. நல்லூர் கந்தன், தேரேறி திரு வீதி வலம் வரும் அழகு காண்பதற்காய் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தில் கூடியுள்ளனர். அதிகாலையிலே பூசைகள், அபிஷேகங்கள், வசந்த…

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகள் – ரயில் போக்குவரத்திற்கு இடையூறு

அனைத்து மார்க்கங்களிலும் பல ரயில் சேவைகளை இரத்து செய்ய நேரிடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  ரயில்வே சாரதிகள் சிலர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறுந்தூர ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதற்கு அதிக…

புதிய அரசியல் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ ஆதரவு?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புதிய அரசியல் கட்சியொன்றுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக Daily Mirror பத்திரிகை இன்று செய்தி வௌ்யிட்டுள்ளது. தொழிலதிபரான திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம மக்கள் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ தமது ஆதரவை வழங்கியுள்ளதாக Daily Mirror பத்திரிகையின்…

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேணை மீதான வாக்கெடுப்பு இன்று (08)  மாலை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.  நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக  73 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நம்பிக்கையில்லா பிரேணை மீதான விவாதம்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடது கை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தற்போது கோரப்பட்டுள்ளதாக பிரதி…

நள்ளிரவு முதல் லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.145, ரூ.58, ரூ.26 இனால் அதிகரிப்பு

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்: (கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்) 12.5kg: ரூ. 2,982 இலிருந்து ரூ. 3,127 ஆக ரூ. 145 இனால் அதிகரிப்பு 5kg: ரூ. ரூ. 1,198 இலிருந்து ரூ. 1,256 ஆக ரூ. 58 இனால் அதிகரிப்பு 2.3kg: ரூ. 561 இலிருந்து ரூ. 587 ஆக ரூ.…

மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான உணவு விநியோகம் இடைநிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான உணவு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த விநியோகஸ்தர்களுக்கு பல மாதங்களுக்கான கொடுப்பனவு…

மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இந்திய வௌியுறவு துறை அமைச்சர் கடிதம்

தமிழக மீனவர்கள் அண்மையில் தாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் இந்த…