20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் தடுப்பூசியான பைசரை பூஸ்டர் டோஸாக வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நேற்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே…
Category: SRI LANKA 1
யாழில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் 19 வயதுடைய இளம் பெண் என்று மருத்துவ அறிக்கையில்…
வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளார். இவர் எதிர்வரும் புதன்கிழமையின் பின்னர் ஆளுநர் பதவியை பொறுப்பேற்பார் என்று தெரிய வருகின்றது. ஜீவன் தியாகராஜா தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னதாக 1984ஆம்…
இலங்கையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ரயில் சேவைகள்
சுகாதார ஆலோசனை காரணமாக இடை நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர இன்று(7) ஊடகங்களுக்கு அளித்த விஷேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 1ஆம் திகதி ரயில்களை…
டொலர்கள் இல்லை ; சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு
நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சீமெந்து தட்டுப்பாடு நிலவுவதால் கட்டுமானத் தொழிலில் உள்ள பலர் கடும் சிரமத்துக்குள்ளாகி யுள்ளனர் என சீமெந்து நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. சீமெந்து ஒரு மூடையின் கட்டுப்பாட்டு விலை 950 ரூபா என்றும் அதிகாரப்பூர்வமற்ற முறையில்…
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு
ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதியைப் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் கே.ஜி.லன்ரோல் தெரிவித்துள்ளார்.முதியோரின் வாழ்வுக்காக பணம் திரட்டும் நோக்கில் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் சமூக சேவை அதிகாரியின் தலையீட்டில்…
யாழில் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மல்லாகத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி கதர்காமதாஸ் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இவரின் சடலம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில்…
கொரோனா தொற்றால் மேலும் 43 பேர் பலி
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 43 பேர் உயிரிழந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து…
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்!
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் ஏஸ்(EVER ACE) தனது பயண வழியில் நேற்று(5) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. எவர்கிரீன் நிறுவனத்தின் எவர் ஏஸ் கப்பலானது 400 மீற்றர் நீளமும் 61.5மீற்றர் அகலமும் கொண்டது. இந்தக் கப்பல் சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ்…
ஜனாதிபதி- இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சந்திப்பு
இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நேற்றுமுன்தினம் பிரதமர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் பிரதிநிதிகளையும் சந்தித்தார். ———— Reported…

