நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் உயிரிழந்த 24 வயது யுவதிக்கு கொரோனா!

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் உயிரிழந்த 24 வயது யுவதி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (ஒக்-15) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி பிரதேச…

சுகாதார வழிகாட்டலில் இன்று முதல் தளர்வுகள்

இன்று வெள்ளிக்கிழமை முதல், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படுகின்றன.   புதிய தளர்வுகளுடனான சுகாதார வழிகாட்டலை நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டார். இதன்படி, திருமண மண்டபத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 25…

கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகள் இருவருக்கு கொரோனா

கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று (ஒக்-14) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த மூதாட்டிகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்டிருந்த…

கொரோனா தொற்றால் மேலும் 21 பேர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 21 பேர் உயிரிழந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட இந்த மரணங்களில் 06 பெண்களும், 15 ஆண்களும்…

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது – மத்திய வங்கி ஆளுநர்

எரிபொருள் விலையேற்றத்திற்கு மத்திய வங்கி ஆதரவளிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார். சர்வதேச எரிபொருள் சந்தையில் பாரிய விலை அதிகரிப்பு காணப்படுவதால் இலங்கையால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை அதிகரிப்பு இலங்கையின் பொருளாதாரத்தில்…

இலங்கை ஜனாதிபதி – சுப்ரமணியம் சுவாமி சந்திப்பு

அலரி மாளிகை நவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினரான  சுப்பிரமணியம் சுவாமி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில்  நேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.————– Reported by : Sisil.L

பொருளாதார நெருக்கடி: பெருமளவானோர் வெளிநாடு செல்லத் தயாராகின்றனர்

கொழும்பிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகம் முன்பாக பெருமளவு இளைஞர்,யுவதிகள் வரிசையில் காத்திருக்கின்றனர்.   நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர்.   குறித்த இளையோர் மருத்துவ சான்றிதழைப் பெறுவதற்காகவும் விசா…

எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் – எரிசக்தி அமைச்சர்

நிதியமைச்சர் நிவாரணம் அல்லது விலை சலுகையை வழங்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.லங்கா ஐஓசி ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 15 ரூபாவாலும்…

யாழின் பிரபல ஆலயங்களுக்குள் சப்பாத்துக்களுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரிகளால் சர்ச்சை

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதி முருகன், வல்லிபுர ஆழ்வார் கோவில்களுக்குள் யாழ்.மாவட்டத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் சப்பாத்துக்களுடன் சென்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து மக்களின் பண்பாட்டை மீறும் வகையில் அவர்கள் செயற்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட…

சூடு பிடித்தது மண்ணெண்ணெய் அடுப்புகளின் வியாபாரம்

எரிவாயு சிலிண்டர்களின் விலைகள்  சடுதியாக அதிகரித்ததையடுத்து கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியில் மக்களில் ஒரு பகுதியினர் நேற்று மண்ணெண்ணெய் அடுப்புகளை வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டனர். Reported by : Sisil.L