இலங்கைக்கு 10 ரயில் எஞ்சின்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. கடனுதவியின் அடிப்படையில் இந்த ரயில் எஞ்சின்கள் இலங்கைக்கு கிடைப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்துள்ளார். அவற்றை கொண்டுவருவதற்கு முன்னர் அவற்றின் தரங்களை ஆராய்வதற்காக ரயில்வே துறை அதிகாரிகள் குழுவொன்று…
Category: SRI LANKA 1
அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு
அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு(20) முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அவிசாவளை…
Batticaloa Campus உயர் கல்வி நிறுவனம் ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு
மட்டக்களப்பு – புனானையில் Batticaloa Campus என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர் கல்வி நிறுவனம் மீளவும் M.L.A.M.ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கல்வி நிறுவனம் இன்று தன்னிடம் கையளிக்கப்பட்டதாக M.L.A.M.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார். கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லாவின் கண்காணிப்பின்…
இலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 19 மில்லியன் டொலர்கள் நிதியுதவி
இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான அபிவிருத்திக்கான உடன்படிக்கையின் பிரகாரம், இந்த நிதியுதவி…
பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் 1 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருள்
பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனொன்றில் இருந்து ஒரு கோடியே 64 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்று சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒருகொடவத்தையிலுள்ள கொள்கலன் முனையமொன்றில் வைத்து இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலாபம் – வென்னப்புவ பகுதியிலுள்ள…
கடமை நேரத்தில் திறன்பேசி (Smartphone) பாவனையை மட்டுப்படுத்துமாறு வட மாகாண சுகாதார உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்
கடமை நேரத்தில் வைத்தியசாலை வளாகத்திற்குள் திறன்பேசிகளை (Smartphone) பாவிப்பதை மட்டுப்படுத்துமாறு வட மாகாண சுகாதார சேவை பணிப்பாளரால் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவிறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கடமை நேரத்தில் அநாவசியமாக கையடக்கத்தொலைபேசி பாவனையில் ஈடுபடுவது தொடர்பில்…
சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி
மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதில் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மின் விநியோகம் சார்ந்த அனைத்து சேவைகள், பெட்ரோலியம், எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான அனைத்து…
அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்ப துறைகளின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்
உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துறைகளின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெறும் “G77 + சீனா”…
ஜனாதிபதி ரணில் கியூபா பயணம்; பதில் அமைச்சர்கள் நியமனம்
G77 + சீனா அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) காலை கியூபா பயணமாகியுள்ளார். “தற்போதைய அபிவிருத்தி சவால்களில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் “G77 மற்றும் சீனா” அரச தலைவர்கள்…
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரையாற்றுவார்
ஐ.நா. செயலாளர் நாயகம் உள்ளிட்ட தலைவர்களுடனும் சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார். “2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான…