இன்று பாடசாலைகளுக்கு சமுகமளித்த ஆசிரியர்கள் பாடசாலை நிறைவடைந்ததும் சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.————– Reported by : Sisil.L
Category: SRI LANKA 1
கிளி / வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய மாணவர்கள் இன்று மீண்டும் வருகை
கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்துக்கு இன்று மீண்டும் வருகைந்த மாணவர்கள் இறை ஆராதனைகளுடன் பாடசாலை கற்றலை மகிழ்ச்சிகரமாக ஆரம்பித்தனர்.பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கி வரவேற்றனர்.——————— Reported by : Sisil.L
நோய் அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் – சுகாதார அமைச்சு
பாடசாலைகள மீள ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்ப பிரிவுகளை…
ஈஸ்டர் தாக்குதல்கள் விடயத்தில் சரியானதைச் செய்யுங்கள் : பாப்பரசர் கர்தினாலுக்கு கடிதம்
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சரியென நினைக்கும் சிறந்த விடயத்தைச் செய்யுமாறும் தாம் விசுவாசித்து செய்ய வேண்டிய நல்ல விடயத்தைக் கூறுமாறும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்,…
இலங்கையில் கொரோனாவால் மேலும் 18 பேர் பலி
இலங்கையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் மேலும் 18 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும் 08 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்த வகையில் 30 வயதுக்கு உட்பட்டவர்களில் பெண் ஒருவரும், 30 தொடக்கம்…
அப்புத்தளையில் சவப்பெட்டி ஏந்தி, ஒப்பாரி வைத்துப் போராட்டம்
பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்புத்தளை நகரில் நேற்று சனிக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சவப்பெட்டியை ஏந்தியும், ஒப்பாரி வைத்தும் போராட்டக் காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோஷம்…
எலிக் காய்ச்சலால் இருவர் மரணம்
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தணிந்துவரும் நிலையில் மறுபுறத்தில் டெங்கு நோயும், எலிக்காய்ச்சலும் அச்சறுத்தத் தொடங்கியுள்ளன. கடந்த ஜூன் மாதம் முதல் கடந்த 20ஆம் திகதி வரையான 04 மாதங்களுக்குள் இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில்…
இலங்கை – கட்டார் மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பு
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் ஷேக் அப்துல்லா பின் சவூத் அல்-தானி ஆகியோருக்கிடையே முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. டோஹா நகரில் அமைந்துள்ள கட்டார் மத்திய வங்கியில் இந்தச் சந்திப்பு…
இரு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இரு இளைஞர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு இரண்டு இளைஞர்களையும் பொலிஸ் அதிகாரி தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில்…
சீனியின் விலை மீண்டும் அதிகரிப்பு
நாட்டில் சீனி கட்டுப்பாட்டு விலை நீக்கப்படும் என்றும் இந்நிலையில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதேவேளை சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன நாட்டுக்குச் சீனியை இறக்குமதி செய்யும் முன்னணி நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில்…

