கம்பஹா, மினுவாங்கொடை ஹோரம்பெல்ல நவலோக பிரதேசத்தில், வைத்தியசாலை ஊழியர் ஒருவரின் மரண வீட்டில் கலந்து கொண்ட 35 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுப்படுத்தப்பட்டுள்ளது. மினுவாங்கொடை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது. மரண வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு…
Category: SRI LANKA 1
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துன்னாலை தெற்கு, கரவெட்டியைச் சேர்ந்த திருமதி ஜெசிகலா வசந்தன் (வயது- 45) என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை(26) இரவு உடல்நலக் குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின்…
கௌதம் அதானியின் விஜயம் உத்தியோகபூர்வமற்றது – அரசாங்கம்
இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, அது ஒரு தனிப்பட்ட விஜயம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த…
253 மருத்துவ உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணத்துக்கு நியமனம்
வடக்கு மாகாணத்தின் மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறைகளை நீக்கும் பொருட்டு 253 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று அனுப்பி வைத்த…
கொரோனாவால் மேலும் 14 பேர் உயிரிழப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 14 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்…
வடமராட்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி
வடமராட்சியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். முள்ளிப் பாலத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த விபத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி வீதியைச் சேர்ந்த பொன்னுத்துரை காண்டீபன் (வயது 40) என்பவரே…
யாழ். குருநகரில் சுமந்திரனுக்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டம்
யாழ். குருநகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இழுவை மடித் தொழிலை தடை செய்ய வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட தொழில் முறமைகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக…
நேற்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு
இலங்கையில் இதுவரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருந்த இரவு நேரப் பயணக் கட்டுப்பாடு நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்படுகிறது. அத்துடன், திருமண நிகழ்வுகளில் பங்கேற்பாளர்கள் தொகை மற்றும் உணவகங்களில் அனுமதிக்கப்படக் கூடியவர்களின் எண்ணிக்கையும்…
இலங்கையில் கொரோனாவால் மேலும் 29 பேர் பலி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 29 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இவ்வாறு மரணமடைந்தவர்களில் 12 ஆண்களும், 17 பெண்களும் அடங்குகின்றனர். …
வடக்கில் 55 வீத மாணவர்களும் 84 சதவீத ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு வருகை
வடக்கில் நேற்று, 55 சதவீத மாணவர்களும், 84 சதவீத ஆசிரியர்களும், 97 சதவீத அதிபர் களும் பாடசாலைகளுக்கு சமுகமளித்தனர் என்று மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் நேற்று அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் ஆரம்பமாகின. இதன்படி,…

