வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வளர்ச்சியடைந்து வடக்கு மாகாண கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், இன்று மாலை முதல் மறு அறிவித்தல் வரை தென்கிழக்கு வங்கக் கடலில்…
Category: SRI LANKA 1
இலங்கையில் மேலும் 15 பேர் கொவிட் தொற்றால் பலி
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் உயிரிழந்தனரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 03 பேரும், 60 வயதுக்கு…
இலங்கையில் அடுத்த இரு மாதங்களில் மற்றுமொரு கொரோனா அலை ஏற்படும் – GMOA
பொதுமக்களின் அறியாமையினால் அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டில் மற்றுமொரு கொரோனா அலைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானித்ததாக செயற்குழு உறுப்பினரான மருத்துவர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார்.…
இலங்கையின் கொவிட் தடுப்பு முயற்சிக்கு கனடா 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி
கொவிட்19 வைரஸுக்கு எதிரரான இலங்கையின் முயற்சிக்கு ஆதரவாக சிரிஞ்சுகள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்களைக் கொள்வனவு செய்ய கனடா 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இந்த உதவி உலக சுகாதார அமைப்பின் மூலம் கிடைத்துள்ளது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு…
இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.சம்பா, கீரி சம்பா, வெள்ளை அரிசி மற்றும் நாட்டு அரிசி ஆகியன இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அடுத்த…
அரசாங்கத்தின் கொள்கைகள் இலங்கையை ஏல மையமாக மாற்றியுள்ளன – சஜித் பிரேமதாச
அரசாங்கத்தின் கொள்கைகள் இலங்கையை ஏல மையமாக மாற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எண்ணெய் குதங்கள், நிலங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பலவற்றை தற்போதைய அரசாங்கம் விற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் இளைஞர்கள் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறும் அவல…
வாழ்வகம் தலைவருக்கு நேற்று ‘யாழ் விருது’ வழங்கப்பட்டது
யாழ் மாநகராட்சி மன்ற சைவ சமய விவகாரக் குழுவால் நடத்தப்படும் 2021ஆம் ஆண்டுக்கான ‘நல்லைக் குமரன்’ வெளியீடும் ‘யாழ் விருது’ வழங்கும் நிகழ்வும் நேற்று(05) நாவலர் மண்டபத்தில் மாநகர ஆணையாளரும் யாழ். மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுத் தலைவருமான இ.த.ஜெயசீலன்…
12 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை; நால்வர் பலி; 6034 பேர் பாதிப்பு
நாட்டில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், 6 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண் சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இரத்தினபுரி, கேகாலை,…
தீபாவளி தினத்தில் வீடுடைத்து 28 இலட்சம் ரூபா பெறுமதியான பணம், நகை கொள்ளை
தீபாவளிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஆலயத்திற்குச் சென்றவரின் வீட்டை கொள்ளையர்கள் உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உட்பட 28 இலட்சம் ரூபா பெறுமதியானவற்றை கொள்ளையிட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (05) மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக…
செல்பி எடுக்க முயன்ற இளைஞன் ரயில் மோதி பலி; வவுனியாவில் சம்பவம்
வவுனியா செட்டிகுளம் தெற்கு பிரதேசசபைக்குட்ட மெனிக்பாம் கல்லாறு பாலம் பகுதியில் இன்று காலை 8.05 மணியளவில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மன்னார் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் நோக்கி…

