தமிழ்நீதிபதிதனதுஉயிரைக்காப்பாற்றஇலங்கையைவிட்டுவெளியேறினார்

நீதிபதி சரவணராஜாவின் நீதித்துறை தார்மீக தைரியத்திற்கு தலைவணங்கும் அதேநேரத்தில் பொறுப்புக்கூறலுக்கு  அழைப்பு விடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செப்டம்பர் 23, 2013 அன்று, நீதிபதி டி.சரவணராஜாமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி, நியாயாதிபதிபதவி, குடும்ப நீதிமன்ற நீதிபதி பதவி, முதன்மைநீதிமன்ற நீதிபதி பதவி, சிறிய உரிமைகோரல் நீதிமன்ற நீதிபதி பதவி, மற்றும் சிறார் நீதிமன்றநீதிபதி பதவி ஆகிய பதவிகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்குஅவர் அனுப்பிய கடிதத்தில், அவர் ராஜினாமாசெய்ததற்கு, “எனது உயிருக்கு அச்சுறுத்தல்” மற்றும் “அதிக மன அழுத்தம்” காரணமாகும் எனக்குறிப்பிட்டுள்ளார் குருந்தூர்மலை விகாரை விவகாரம் தொடர்பாகஅவர் வழங்கிய தீர்ப்பின் காரணமாகவே நீதிபதிசரவணராஜா உயிருக்கு அச்சுறுத்தல்களைஎதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னையநீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதித்தார்கள் என்றும், இந்துக்களின் இடத்தில், ஜூலை 14, 2022க்குப் பிறகு கட்டப்பட்ட தூபிஉட்பட அனைத்து புதிய கட்டுமானங்களையும்அகற்ற வேண்டும் என்றும் அவர் ஒரு தீர்ப்பை வழங்கினார். தொல்பொருள் கண்டுபிடிப்பு என்ற பொய்யானசாக்குப்போக்கின் கீழ், சிங்கள இனக்குழுவைஉள்ளடக்கிய இலங்கை அரசு, பல ஆண்டுகளாக, தற்போதும் கூட, இந்து கோவில்களைமுழுமையாக அழித்து, புத்த கோவில்களாக மாற்றும்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.…

வறுமைக் கோட்டை கண்டறிய வேண்டும்

அஸ்வெசும திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன், நாட்டிலுள்ள ஒரு குடும்ப அலகின் வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பு நடத்தி, வறுமைக் கோட்டைக் கண்டறிந்து,ஏழை, எளியவர்களைக் கண்டறிந்து அதைச் செயல்படுத்த வேண்டும் என்றும்,இங்கு எத்தகைய விஞ்ஞானபூர்வ தன்மையின்றி 20 இலட்சம் பேர் தெரிவு செய்யப்பட்டு…

நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல்

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி…

நாட்டின் முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை: IMF பிரதிநிதிகள் குழு தெரிவிப்பு

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட  கடன் வசதி  தொடர்பான முதலாவது மீளாய்வு குறித்த கலந்துரையாடலுக்காக  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு கொழும்பில் இன்று (27) கூடியது.  சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)  பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை அதிகாரிகள் செப்டம்பர் 14 ஆம் திகதி…

சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் ஒக்டோபரில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை: அலி சப்ரி

னாவுக்கு சொந்தமான Shi Yan 6 ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  சர்வதேச செய்தி ஊடகமொன்றுக்கு அமைச்சர் அலி சப்ரியினால் கடந்த திங்கட்கிழமை (25) வழங்கப்பட்ட…

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டு தொகை கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதற்கமைய, 878,650.53 அமெரிக்க டொலர் இடைக்கால இழப்பீடாக கிடைக்கப்பெற்றுள்ளது. எஞ்சிய 16 மில்லியன் ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…

300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கென்ய பிரஜை கைது

 சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த குற்றச்சாட்டில் கென்ய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் டோகாவிலிருந்து நேற்று(24) இலங்கைக்கு வந்துள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர்…

மீண்டும் போராட்டம் வெடிக்கும் – சஜித் எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கம் எல்லா சந்தர்ப்பத்திலும் மக்களின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றது என்றும், அதன் புதிய போக்கே சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளை கட்டுப்படுத்துவதும்,சீர்குலைப்பதும் தடுப்பதும் என்றும்,அந்நோக்கத்திற்காக,”*நிகழ் நிலைக் காப்பு*” என்ற வார்த்தை முன்வைக்கப்பட்டு, சமூக ஊடகங்களின் உரிமை அரசாங்கத்தால்…

கோழி இறைச்சி ரூ. 850 முதல் 900 ரூபா வரை குறையும்

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை உள்ளூர் சந்தையில் 850 ரூபா முதல் 900 ரூபாவரை கொள்வனவு செய்ய வாய்ப்பு ஏற்படுமென்று வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். கோழி இறைச்சி விலையை 850…

இணையம் ஊடான மோசடிகள் அதிகரிப்பு

இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் இவ்வாறான 150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல குறிப்பிட்டார்.  தொழில் பெற்றுத்தருவதாகக்…