வெளிநாடுகளில் வதியும் இலங்கையர்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யும் வங்கிக் கணக்குகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர்…
Category: SRI LANKA 1
யாழ்.அராலியில் இரு வீடுகளில் எரிவாயு அடுப்பு வெடிப்பு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட அராலி கிழக்கு ஜே163 கிராம சேவகர் பிரிவில் உள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்புகள் வெடித்துச் சிதறியுள்ளன. கடந்த 28ஆம் திகதி ஒரு வீட்டிலும் 29ஆம் திகதி மற்றைய வீட்டிலும் இந்த வெடிப்புச்…
உயிர் வாயுவை பயன்படுத்தி சமைப்பது எப்படி – இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டார் பசில்
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உயிர்வாயுவைப் பயன்படுத்தி எவ்வாறு சமையல் செய்வது என பயிற்சியெடுத்துள்ளார். இந்தியாவின் சுலாப் சர்வதேச சமூக சேவை அமைப்பின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த நிதியமைச்சர் உயிர் வாயு சமையல் குறித்த பயிற்சியில் ஈடுபட்டார்.—————— Reported…
தலைமன்னார் துறை பாடசாலை மாணவர்கள் 12 பேர் உட்பட 15 பேருக்கு கொரோனா!
தலைமன்னார் துறை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு நேற்று வியாழக்கிழமை (1) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.…
மாதகலில் நில அளவைத் திணைக்களத்தினரை விரட்டியடித்த மக்கள்
கடற்படை புலனாய்வாளர்கள், இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களையும் தாண்டி நேற்று(30) மாதகல் கிழக்கு ஜே/150 கிராம சேவையாளர் பிரிவில் குசுமான்துறை பிரதேசத்திலுள்ள அக்போ இரண்டு கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பு முயற்சி மக்களின் கூட்டு முயற்சியால் முறியடிக்கப்பட்டது. குறித்த பிரதேசத்தில் காணி அளவீடு…
வரலாற்றின் முதல் தடவையாக செங்கோலுடன் யாழ். மாநகர சபை அமர்வு
வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகர சபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண…
எதிர்வரும் 15 ஆம் திகதி வரையான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர் வரும் 15ஆம் திகதி வரையான காலப்பகு திக்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு நோய் பரவும் அபாயத்தை குறைக்கும் வகையில், தேவையில்லாமல்…
இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்தது
கொழும்பு செட்டித்தெருவில் தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி நேற்று(29) 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 107,800 மற்றும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 116,500 ஆகும். நேற்று முன்தினம்…
மண்டைதீவுக் கடலில் படகுகள் மூழ்கின – இரு மீனவர்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் – மண்டைதீவு முனைக் கடற்பரப்பில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக இரண்டு மீன்பிடிப் படகுகள் மூழ்கியுள்ளதாகவும், தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.குருநகர் மீனவர்கள் படகுகளில் தொழிலுக்குச் சென்ற போதே இந்தச்…
இலங்கையில் மேலும் 23 பேர் கொரோனாவால் பலி
இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் 23 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிவித்தது. இதன்படி, 30 -59 வயது பிரிவில் 3 ஆண்கள், ஒரு பெண்ணுமாக 4 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 13 ஆண்கள்,…

