பாடசாலை பஸ் சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு

எரிபொருள் நிவாரண கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை எந்தப் பதிலையும் வழங்காததால் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை இன்று முதல் 20 வீதத்தால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை அனைத்து மாகாண பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தீர்மா னித்திருக்கின்றது. இது தொடர்பில்…

இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது

நாடளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று முன்தினம் கொவிட்-19 தொற்றால் 24 உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று சுகாதாரப் பிரிவு உறுதி செய்தது. இதைய டுத்தே இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. 20 ஆண்களும்,…

2022இல் களிமண் அடுப்பு – விறகு – மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டில் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் களிமண் அடுப்புகள், விறகுகள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு சந்தையில் பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. இதேவேளை சந்தையில் காய்கறிகளின் விலை மேலும் உயர்ந்துள்ளதால், நுகர்வோர் தங்கள் வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை…

டொலர் இல்லை- வரும் மாதங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்

டொலர் தட்டுப்பாடு காரணமாக பல அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 3 அல்லது 4 மாதங்களில் அரச வைத்தியசாலைகளில் உள்ள மருந்தகங்கள் மற்றும் சத்திரசிகிச்சை கூடங்களில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச…

நாட்டில் ஐந்தாண்டுகளாக தேன் குறித்த கணக்கெடுப்பு இல்லை

2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் தேன் உற்பத்தியாளர்கள் தொடர்பிலோ, தேன் உற்பத்தி தொடர்பிலோ எவ்விதத் தகவலும் சேகரிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. பிந்துனுவெவ தேனீ அபிவிருத்திப் பிரிவு இந்தத் தகவல்களைச் சேகரித்திருக்க வேண்டிய போதிலும், அதனை முறையாகச் செய்யவில்லை என விவசாய அமைச்சின்…

2021இல் 120,000 இலங்கையர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

இவ்வருடம் 120,000 இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.   கொவிட் தொற்று நோய் இருந்த போதிலும் கட்டாருக்கு  30,000 பேரும், சவூதி…

ஜனவரியில் அமைச்சரவை மாற்றம் : அமைச்சர் கெஹலிய

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை 2022 ஜனவரி மாதம் மறுசீரமைக்கப்படக்கூடும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இணக்கம் வெளியிட்டுள்ளார். அந்த மாற்றத்தை ஜனவரி 8 ஆம் திகதி நிகழ்த்துவதா…

உள்ளூர் பால் மாவின் விலையும் அதிகரிக்கிறது

உள்ளூர் பால் மாவின் 400 கிராம் பக்கெற்றின் விலை சுமார் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது என பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை தொழில் துறைக்கான இராஜாங்க அமைச்சர் பி. ஹேரத் தெரிவித்தார். நுகேகொடையில் தனியார் பால் மா உற்பத்தியாளருக்குச் சொந்தமான…

2021ஆம் ஆண்டு வீதி விபத்துகளில் 2000 பேர் பலி

கடந்த 11 மாதங்களில் இடம்பெற்ற 20,280 வீதி விபத்துகளில் 2082 பேர் உயிரிழந்துள்ளதாக  வீதிப் பாதுகாப்புக்கான தேசிய கவுன்சிலின் தலைவர் அன்டன் டி மென்ஸ் நேற்று  தெரிவித்தார். குறைந்தது 526 பாதசாரிகள், 776 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 130 சைக்கிள் ஓட்டுநர்கள்,…

கிழக்கு மாகாண சாகித்ய விருது பெறும் நூல்கள் – 2021

இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண சாகித்திய விருது பெறும் நூல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அவையாவன:1. சுயகவிதை: ‘பாண்டியூரன் கவிதைகள்’ அமரர் கு. கணபதிப்பிள்ளை சுயகவிதை: விசேட பரிசு ‘புதிய எட்டுத்தொகை’ திரு. சோ. இராஜேந்திரம் (தாமரைத்தீவான்) சுயசிறுகதை: ‘ஒரு தேநீர் ஒரு குவளை’  ஜனாப். ஏ.…