ஜனவரி நடுப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் : உதய கம்மன்பில

ஜனவரி மூன்றாம் வாரத்திலிருந்து எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஆபத்து உள்ளது; ஆனால் அது உடனடியாக நடக்காது. எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை வழங்க முடியாவிட்டால் இந்த நிலை ஏற்படும் என்றார். ஏனைய…

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் பொறுப்பேற்பு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல்…

அரிசியின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கலாம் :அரிசி ஆலை உரிமையாளர்கள்

தற்போது நிலவும் உர நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொலன்னறுவையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள், உரப் பிரச்சினை காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடும்…

சீன உரக் கப்பலுக்கு மக்கள் வங்கி 6.9 மில்லியன் டொலரை செலுத்துகிறது

தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பதாக இலங்கை நிராகரித்த சீன உரத்தின் கையிருப்புக்கு பணம் செலுத்துவதற்கு மக்கள் வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி, குறித்த சீன நிறுவனத்துக்கு இன்று 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. கொடுப்பனவுகளை இடைநிறுத்தி கொழும்பு…

நடுக்கடலில் சிக்கிய 11 இந்திய மாலுமிகளை மீட்ட ஈரான் கடற்படை

மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுக்கடலில் மூழ்கிய படகில் சிக்கி தவித்த 11 இந்திய மாலுமிகளை ஈரான் கடற்படையினர் மீட்டுள்ளனர். ஓமானின் சோகர் துறைமுகத்துக்கு சீனி ஏற்றிச் சென்ற படகு, சூறாவளிக் காற்று மற்றும் கடல் சீற்றத்தில் சிக்கி…

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்றறிக்கை வெளியீடு

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையொப்பத்துடன் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.—————– Reported by : Sisil.L

தனியார் துறை ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கக் கலந்துரையாடல்

வாழ்க்கைச் சுமையை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களே உணர்ந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் தனியார் துறை ஊழியர்களும் 5000 ரூபா கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பான…

பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்

இலங்கையில் பால் மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பால் மாவை ஏற்றி வரும் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்குத் திரும்பும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.பால் மா…

மலேரியா நுளம்பு இனம் இலங்கையில் அடையாளம்; யாழில் பலருக்கு தொற்று

யாழ்ப்பாண நகர எல்லையில் Anopheles Defense எனப்படும் மலேரியா நுளம்பு இனம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இது ஆபத்தான நிலை எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

பேருவளை ஒமிக்ரோன் தொடர்பாளர்களால் முழு நாடும் ஆபத்தில் மூழ்கலாம்: மருத்துவர் ஹேமந்த ஹேரத்

பேருவளை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத், மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள்…