விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகுகிறார்

விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ தனது பதவியை தற்காலிகமாக இராஜினாமா செய்துள்ளார். நாச வேலைகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய ஆபத்தான நிலைமையை நீக்கும் வரை பதவி விலகுவதாக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வன…

12ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று திறந்து வைப்பு

12ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தை எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.   இதற்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து…

நான் ஜனாதிபதியானால் எனது அரசாங்கத்தில் 25 அமைச்சர்களே இருப்பர் – அனுர குமார

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சரவை அமைச்சர்களும் 25 பிரதி அமைச்சர்களும் மாத்திரமே இருப்பர் என அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த அரசாங்கத்தின் கீழ் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்ற பல்வேறு விடயங்கள் நிபுணர்கள் குழுவிடம்…

எரிபொருள் இல்லை: சப்புகஸ்கந்த மின் உற்பத்தி மீண்டும் நிறுத்தம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்தவிலுள்ள இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலும் நேற்று இரவு மீண்டும் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் எண்ணெய்க் கையிருப்பு நேற்றிரவு 8 மணி வரை மட்டுமே இருந்ததாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள்…

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் தீ விபத்து: மருத்துவ உபகரணங்களுக்கு பாரிய சேதம்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நேற்று (20) இரவு ஏற்பட்ட தீ விபத்தில்  வைத்தியசாலையின் பல சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு மருத்துவமனையின்  ஒரு  கட்டிடத்தில் முதலில் தீ பரவியது, பின்னர் பல இடங்களுக்கு வேகமாகப் பரவியது.…

வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கடத்த முயற்சித்த ஐவர் கைது

இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயக் கடத்தலில் ஈடுபட்ட ஐவரை இலங்கை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணை யைத் தொடர்ந்து மூன்று பெண்கள் மற்றும் இரு ஆண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக்…

அரச ஊழியர்களுக்கான விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் வெளியிட்டுள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும்…

பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கையருக்கு பரிசாக வீடு

டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் 2020 ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனையைப் படைத்து இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதிய வீட்டை வழங்கி வைத்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலையீட்டில்…

எதிர்வரும் 25ஆம் திகதிக்குப் பின் சீமெந்து தட்டுப்பாடு குறையும் வாய்ப்பு

எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பிறகு சிமெந்து தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளதாக சிமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 6 இலட்சம் சீமெந்து மூடைகளை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் நேற்று (19) நாட்டை வந்தடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்தோனேசியாவிலிருந்து ஒரு கப்பல்…

நீண்ட விடுமுறைப் பயணங்களால் தொற்று உருவாகும் ஆபத்து: ஹேமந்த ஹேரத்

நீண்ட வார விடுமுறையில் பலர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் ஒன்றுகூடல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் காய்ச்சல் அல்லது சுவாசிப்பதில் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறும் சுகாதாரத் துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா நோயாளர்களுக்கான ஒட்சிசன் தேவையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக…