வெகுண்டெழுந்த மக்களால் அழிக்கப்பட்ட அரசியல் வாதிகளின் சொத்துக்கள்

நாட்டின் சில நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் மற்றும் வீடுகள் தீ வைத்து எரிக்கப் பட்டுள்ளன.மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டிற்கு ஒரு குழுவினர் தீ வைத்துள்ளனர். மொரட்டுவை வில்லோரவத்த பிரதேசத்தில் உள்ள இவரது வீட்டிற்கு வந்த குழுவொன்று அவரது வீட்டை தாக்கி…

அலரி மாளிகைக்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தாக்குதல்!

அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேவேளை, இன்று முற்பகல் அலரி மாளிகை முன்பாக ஒன்றுகூடியிருந்த பிரதமரின் ஆதரவாளர்களுக்கும் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையில் முறுகல் நிலை…

இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு அமுல்!

காலி முகத்திடலில் இடம்பெற்ற குழப்பகரமான நிலையை அடுத்து நாடு முழுவதும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.————————- Reported by : Sisil.L

பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மஹிந்த!

நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்துவரும் நெருக்கடி நிலையின் தொடராக பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக  பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று அலரி மாளிகையில் பொதுஜன முன்னணியினருடன்…

நாடளாவிய ரீதியில்  எரிபொருள் தரநிலை ஆய்வு

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் நாடளாவிய ரீதியில் நிரப்பு நிலையங்களில் எரிபொருளின் தரத்தை சரிபார்க்க சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. எரிபொருளின் தரம் குறித்த முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் எரிபொருள்…

15 மணி நேர மின் வெட்டை எதிர்கொள்ள நேரிடலாம் -நிதியமைச்சர்

எதிர்காலத்தில்  15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமாகி விட்டதாகவும், அந்நியச் செலாவணிக் கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாக உள்ளதாகவும் அவர்…

சஜித் பிரதமராக பதவியேற்க அழைப்பு விடுக்கப்படலாம்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் எனத் தகவல்கள்…

ரணிலின் வீட்டின் முன்  போராட்டம்

கொழும்பு 07 ஐந்தாவது ஒழுங்கையில்  அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ரணிலின் ஆதரவாளர்கள் ரணில் ஸ்டே கோம் என கோஷமெழுப்பினர். ———— Reported by :…

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தல்

பல மாதங்களாக நீடித்து வரும் ரஷ்ய – உக்ரைன் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் இதனை வலியுறுத்தி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னமும் நட்டத்தையே எதிர்கொள்கிறது – எரிசக்தி அமைச்சர்

கடந்த  18ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்திப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விலைகள் அதிகரித்துள்ள போதிலும் டீசல் மற்றும் பெற்றோல் நட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர்…