கடல் மார்க்கமாக  வெளிநாடு செல்ல முயன்ற 67 பேர் திருமலையில் கைது

திருகோணமலையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை கடற்பகுதியில் சல்லி, சாம்பல்தீவுப் பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று (23) இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது…

எரிபொருள் விலை அதிகாலை முதல் மீண்டும் அதிகரிப்பு

இன்று(24) அதிகாலை 03 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 338 ரூபாவுக்கு…

இம்முறை 517,496 பரீட்சார்த்திகள் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்

இன்று(23) ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,844 நிலையங்களில் இடம்பெறுகிறது. இந்த வருடம் இப்பரீட்சைக்கு 517,496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் அவர்களில் 407,129 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 110,367 தனியார் விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

கொழும்பு 13இல் எரிவாயு வழங்கக் கோரி மக்கள் வீதி மறியல்

கொழும்பு -13 ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் தமக்கு எரிவாயு வழங்கக் கோரி இன்று(23) காலை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக வீதி மறியலில் ஈடுபட்டனர். ——————  

கராப்பிட்டிய வைத்தியசாலை நோயாளர்கள் அனுமதிக்கு  வரையறை

ஊழியர்களின் வருகை குறைந்துள்ளதால், நோயாளர்களை அனுமதிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக ஊழியர்களின் வருகை சுமார் 50 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் அவசர நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என அவர்…

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் இன்று போராட்டம்

நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து ,பொது மக்களின் வாழ்வாதாரம் கஷ்டத்துக்குள்ளான நிலையில் சுகாதார சேவையில் நிலவும் குறைபாடுகளை நீக்க வலியுறுத்தியும் , மருத்துவப் பற்றாக்குறையை நீக்க வலியுறுத்தியும் இன்று(23)  திங்கட்கிழமை காலை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் , தாதியர்கள் ,…

மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

இலங்கையின் புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று (23) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அவர்களது விபரம் வருமாறு: டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில் அமைச்சர் பந்துல குணவர்தன – வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும்…

பாடசாலைக் கல்வி முறையில் மாற்றம் செய்யப்படும் – கல்வி அமைச்சர்

தற்போது நடைமுறையில் இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, விரைவில் பாடசாலைக் கல்வி முறையில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதேவேளை, தேசிய பாடசாலைகளுக்கான…

ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு களிம்பு வகைகளை அன்பளிப்பு செய்த அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்

யாழ். ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை தோல் நோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான களிம்பு(Ointments)வகைகள் தீர்ந்து போன நிலையில் அவற்றை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்து நோயாளர்களுக்கு வழங்கும் முகமாக அவுஸ்திரேலியாவில் வதியும் நாரந்தனையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை விஜயநாதன் என்பவர்…

கலவரத்தில் ஈடுபட்டால் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது – எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் நிரப்பு நிலையங்களை தடுத்து கலகத்தை ஏற்படுத்தினால், எரிபொருள் நிரப்பப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.   இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எரிபொருளை…