வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை

இந்த வாரத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், நீர் வழங்கல், சுகாதாரம்,…

பலாங்கொடையில் நீர் கலந்த மண்ணெண்ணெயால் அமைதியின்மை

பலாங்கொடை தும்பகொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை நேற்று(13) ஏற்பட்டது.இரண்டு மாதங்களின் பின்னர் நேற்று எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெறப்பட்ட மண்ணெண்ணெயில் தண்ணீரில் கலந்துள்ளமையே இதற்குக் காரணம். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தும்பகொட கூட்டுறவு எரிபொருள்…

பழங்களுக்கு தட்டுப்பாடு; மூடப்படும் பழக்கடைகள்

கொழும்பு புறக்கோட்டை  உட்பட பல முக்கிய நகரங்களில் உள்ள பழக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.உள்ளூர் பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அரசாங்கம் விசேட வரி விதித்துள்ளதால் பழங்களுக்கு…

சந்தைகளில் மீன்களின் விலைகள் அதிகரிப்பு

சந்தைகளில் மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, தலபத் மீன் கிலோ ஒன்று 2,200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதுடன், சாதாரண சூடை(சாலை) மீன் 800 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். டீசல்…

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் இன்று(13)  நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் புதன்கிழமை முதல் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். பொறியியலாளர் விஜித ஹேரத்தின் இராஜினாமாவைத் தொடர்ந்து இவர் லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.——————– Reported by:Anthonippillai.R

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் திருவிழா இன்று

வரலாற்று சிறப்பு மிக்க கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் 188ஆவது வருடாந்தத் திருவிழா இன்று (13) திங்கட்கிழமை வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. இதன்படி அதிகாலை 4.00 மணிக்கு தமிழ் மொழியிலும் 5.00 மணிக்கு சிங்கள மொழியிலும் காலை 6.00 மணிக்கு…

சீனாவிலிருந்து இலங்கைக்கு அரிசி

சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijiang தனது டுவிட்டர் கணக்கில், முதல் தொகுதி அரிசி கப்பலில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த மனிதாபிமான 500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துகளின் முதல் தொகுதி…

கோட்டா முறையில் எரிபொருள் விநியோகம் – அமைச்சர் கஞ்சன

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர்களை பதிவுசெய்து கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூலை முதல் வாரத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.…

4 பில்லியன் பவுண்ஸ் தரமற்ற கொரோனா கவசப் பொருட்களை எரிக்க பிரிட்டன் திட்டம்

உலகம் முழுவதும் கொரோனா பரவலைத் தொடர்ந்து, அந்த வைரஸில் இருந்து பாதுகாக்க கொரோனா முகக்கவசங்கள், கொரோனா தடுப்பு அங்கிகள் உள்ளிட்டவை வாங்கப்பட்டன. இந்நிலையில் பிரிட்டன் அரசு கொள்வனவு செய்துள்ள 4 பில்லியன் பவுண்ஸ் மதிப்பிலான கொரோனா கவசப் பொருட்கள் தரமற்றவை என…

இடைக்கால அரசாங்கத்தை அவசியம் உருவாக்க வேண்டும் -மைத்திரிபால சிறிசேன

தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் உடனான சந்திப்பின் பின்னர் பொலன்னறுவையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…