SRI LANKA 1 https://vanakkamtv.com/category/sri-lanka-1/ The front line Tamil Canadian News Fri, 10 May 2024 13:25:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://i0.wp.com/vanakkamtv.com/wp-content/uploads/2021/03/cropped-Logo5-FINAL.png?fit=32%2C32&ssl=1 SRI LANKA 1 https://vanakkamtv.com/category/sri-lanka-1/ 32 32 194739032 KARAOKE AND DJ NIGHT https://vanakkamtv.com/karaoke-and-dj-night/ https://vanakkamtv.com/karaoke-and-dj-night/#respond Fri, 10 May 2024 13:24:44 +0000 https://vanakkamtv.com/?p=33360 The post KARAOKE AND DJ NIGHT appeared first on Vanakkam News.

]]>

The post KARAOKE AND DJ NIGHT appeared first on Vanakkam News.

]]>
https://vanakkamtv.com/karaoke-and-dj-night/feed/ 0 33360
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் அணையாகத்தால் காரணமின்றி வேட்ப்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இணைந்து ஓர் ஊடக சந்திப்பு நடைபெற்றது https://vanakkamtv.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d-2/ https://vanakkamtv.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d-2/#respond Thu, 02 May 2024 12:20:10 +0000 https://vanakkamtv.com/?p=33247 The post நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் அணையாகத்தால் காரணமின்றி வேட்ப்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இணைந்து ஓர் ஊடக சந்திப்பு நடைபெற்றது appeared first on Vanakkam News.

]]>

The post நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் அணையாகத்தால் காரணமின்றி வேட்ப்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இணைந்து ஓர் ஊடக சந்திப்பு நடைபெற்றது appeared first on Vanakkam News.

]]>
https://vanakkamtv.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d-2/feed/ 0 33247
தமிழின அழிப்பு நினைவு நாள் | MAY 18 https://vanakkamtv.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be/ https://vanakkamtv.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be/#respond Sat, 27 Apr 2024 11:22:02 +0000 https://vanakkamtv.com/?p=33155 The post தமிழின அழிப்பு நினைவு நாள் | MAY 18 appeared first on Vanakkam News.

]]>

The post தமிழின அழிப்பு நினைவு நாள் | MAY 18 appeared first on Vanakkam News.

]]>
https://vanakkamtv.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be/feed/ 0 33155
காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் https://vanakkamtv.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae/ https://vanakkamtv.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae/#respond Wed, 24 Apr 2024 16:43:53 +0000 https://vanakkamtv.com/?p=33112 ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க…

The post காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் appeared first on Vanakkam News.

]]>

ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். 

வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும்.

வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும்.

இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். 

தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது.

ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். 

நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். 

எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். 

காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Reported by:S.Kumara

.

The post காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் appeared first on Vanakkam News.

]]>
https://vanakkamtv.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae/feed/ 0 33112
ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு https://vanakkamtv.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/ https://vanakkamtv.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/#respond Wed, 24 Apr 2024 10:08:21 +0000 https://vanakkamtv.com/?p=33104 இலங்கை மின்சார ஊழியர் சங்கம் நாளை (24) பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்து நடத்த ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த…

The post ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு appeared first on Vanakkam News.

]]>

இலங்கை மின்சார ஊழியர் சங்கம் நாளை (24) பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்து நடத்த ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொல்துவ சுற்றுவட்டத்தை சுற்றி பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்தவொரு வீதியையும் மறித்து  ஆர்ப்பாட்டம் அல்லது வன்முறையில் ஈடுபடுவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Reported by : S.Kumara

The post ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு appeared first on Vanakkam News.

]]>
https://vanakkamtv.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/feed/ 0 33104
விவாதத்திற்கு தயார் – சஜித் அறிவிப்பு https://vanakkamtv.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf/ https://vanakkamtv.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf/#respond Wed, 24 Apr 2024 02:37:48 +0000 https://vanakkamtv.com/?p=33090 நளின் பண்டார பொருளாதார துறையில் விவாதத்திற்கு வருமாறு சகோதரர்களுக்கு சவால் விடுத்த போது, பொருளாதார நிபுணர்களின் விவாதத்தில் இருந்து தப்பிய சகோதரர்கள் மீண்டும் தலைவர்களுக்கு இடையில் விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்தனர். மே மாதத்தில் இந்த இரண்டு விவாதங்களுக்கும் ஐக்கிய மக்கள்…

The post விவாதத்திற்கு தயார் – சஜித் அறிவிப்பு appeared first on Vanakkam News.

]]>

நளின் பண்டார பொருளாதார துறையில் விவாதத்திற்கு வருமாறு சகோதரர்களுக்கு சவால் விடுத்த போது, பொருளாதார நிபுணர்களின் விவாதத்தில் இருந்து தப்பிய சகோதரர்கள் மீண்டும் தலைவர்களுக்கு இடையில் விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்தனர். மே மாதத்தில் இந்த இரண்டு விவாதங்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தலைவர்களுக்கு இடையிலான இரண்டு விவாதங்களுக்கும் தாம் தயாராக இருப்பதாகவும், இதிலிருந்து தப்பி ஓடாமல், இந்த இரண்டு சவால்களையும் ஏற்றுக்கொள்ளுமாறும், கோழைகளாக தப்பித்து ஓடாது, விவாதத்திற்கு வருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 162 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய, ஒகண்தயாய மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 23 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ​​பாடசாலையின் இதர தேவைகளைக்காக ஒரு இலட்சம் ரூபா நிதியை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் நன்கொடையாக வழங்கி வைத்தார். 

பொருளாதார வல்லுநர்கள் மத்தியிலான விவாதத்திற்கு முடியாது என கூறுவது அவர்களின் பொருளாதார வல்லுனர்களால் நாட்டுக்கான சரியான பொருளாதார பார்வையை முன்வைக்க முடியாமையினாலா என்ற பிரச்சினை எழுகிறது.

எனவே, கடிதம் அனுப்பாமல் மே மாதம் இரு விவாதங்களுக்கும் வாருங்கள். அதே போல் விவாதங்கள் நடத்துவது போலவே, வெறும் வாய்வீராப்பு காட்டாமல் மக்களுக்கு சேவை செய்து காட்டுங்கள். பிரயோக ரீதியான தலைவர்களே நாட்டிற்குத் தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீராப்பு பேச்சுக்களால், பொய்களால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுக்கும், மக்கள் பணிக்கும் தயாராக இருப்பதால்,அஞ்ஞாது விவாதத்திற்கு வருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Reported by:S.Kumara

The post விவாதத்திற்கு தயார் – சஜித் அறிவிப்பு appeared first on Vanakkam News.

]]>
https://vanakkamtv.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf/feed/ 0 33090
கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்ற இடமளிக்க கூடாது https://vanakkamtv.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ https://vanakkamtv.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#respond Wed, 24 Apr 2024 02:34:01 +0000 https://vanakkamtv.com/?p=33084 கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு நெலும் பொக்குன…

The post கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்ற இடமளிக்க கூடாது appeared first on Vanakkam News.

]]>

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் இன்று (23) நடைபெற்ற அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 10 ஆவது வருடாந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கமானது (APLA), இலங்கை முழுவதும் வியாபித்திருக்கின்ற பிரத்தியேக வகுப்புகளின் ஆசியர்கள் ஒன்றிணைந்து, 2004 ஆம் ஆண்டில் உருவாக்கிய அமைப்பாகும்.

அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் ஆரம்ப அங்கத்தவர்களில் ஒருவரும், சிரேஷ்ட கலாநிதியுமான கே.ஆரியசிங்கவிற்கு சிரேஷ்ட வளவாளருக்கான விருதும் ஏனைய வளவாளர்களுக்கான விருதுகளும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டதோடு, நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்த ஜனாதிபதிக்கு வளவாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திர பண்டாரவினால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்க நிறைவேற்றுக் குழு உறுபினர்களுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் இணைந்துகொண்டார்.

Reported by: S.Kumara

.

The post கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்ற இடமளிக்க கூடாது appeared first on Vanakkam News.

]]>
https://vanakkamtv.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/ 0 33084
கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம் https://vanakkamtv.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%8b/ https://vanakkamtv.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%8b/#respond Wed, 24 Apr 2024 02:31:01 +0000 https://vanakkamtv.com/?p=33078 உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி நாளை காலை இலங்கை வரும்போது விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அ முல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி நாளை பிற்பகல் கொழும்பில் பல வீதிகள் பல சந்தர்ப்பங்களில் மூடப்படும்…

The post கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம் appeared first on Vanakkam News.

]]>

உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி நாளை காலை இலங்கை வரும்போது விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அ முல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி நாளை பிற்பகல் கொழும்பில் பல வீதிகள் பல சந்தர்ப்பங்களில் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை நாளை (24) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியின் இருபுறமும் வாகன போக்குவரத்துக்கு வாய்ப்பில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

 மேலும் அதிவேக வீதியில் இருந்து பேலியகொட, ஒருகுடவத்த சந்தி, தெமட்டகொட, பொரளை, டி.எஸ்.சேனநாயக்க சந்தி, ஹோர்டன் பிளேஸ், ஹோர்டன் சுற்றுவட்டம், கிரீன் பாத்,  நூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், ஆர்ஏ டி மெல் மாவத்தை, சாந்த மைக்கல் வீதி, காலி வீதி இருந்து கோட்டை வரையிலான வீதி, ஹில்டன் ஹோட்டல் வரையான வீதி ஆகிய மூடப்படவுள்ளன.

கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டம் பிற்பகல் 3.30 மணிக்குப் பின்னர் மூடப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து காலி வீதி உட்பட பல வீதிகள் மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை மூடப்படும்.

மீண்டும் இரவு 7.30 மணிக்குப் பின்னர் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பாதை மூடப்படவுள்ளதுடன் இரவு 9.30 மணிக்குப் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து NSA சுற்றுவட்ட காலி வீதி உட்பட பல வீதிகள் மூடப்படும்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை இரவு 9.30 முதல் இரவு 10.30 வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், நாளை காலை 9.30 முதல் 11 மணி வரை மத்தள முதல் உமா ஓயா வரையான வீதி சில நேரம் மூடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மீண்டும் வீதி மூடப்பட்டு மத்தள விமான நிலையத்தைச் சுற்றி விசேட பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Reported by S.Kumara

The post கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம் appeared first on Vanakkam News.

]]>
https://vanakkamtv.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%8b/feed/ 0 33078
கல்வி, காணி,வீட்டு உரிமைகளை வழங்கி மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதார்களாக்குவோம் https://vanakkamtv.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/ https://vanakkamtv.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/#respond Wed, 17 Apr 2024 12:52:30 +0000 https://vanakkamtv.com/?p=33032 கொழும்பு, கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகளுடன் ரன்திய உயன வீட்டுத்தொகுதி. • சீன நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 1996 வீடுகள் இரண்டு வருடங்களில் மக்களிடம் கையளிக்கப்படும். • மேலும் 50,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்.கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை…

The post கல்வி, காணி,வீட்டு உரிமைகளை வழங்கி மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதார்களாக்குவோம் appeared first on Vanakkam News.

]]>
கொழும்பு, கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகளுடன் ரன்திய உயன வீட்டுத்தொகுதி.

• சீன நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 1996 வீடுகள் இரண்டு வருடங்களில் மக்களிடம் கையளிக்கப்படும்.

• மேலும் 50,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்.
கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி.மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு முகத்துவாரத்தில் (09) நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இதன்போது 2010 ஆம் ஆண்டில் கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகள் அடங்கிய இந்த வீட்டுத்தொகுதியை ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளித்தார்.பத்து வருடங்களுக்கு மேலாக காஜிமாவத்தை மக்கள் நரகத்தில் வசித்துள்ளனர். அந்த வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அதனால் இந்த குடியிருப்புகளை மக்களுக்கு விரைவில் கையளிக்க முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இது தொடர்பில் அதிக அக்கறை காட்டினார். இன்று நீங்கள் பெற்றுகொள்ளும் இந்த வீடு உங்களுக்கு மிகவும் மதிப்புள்ள சொத்தாகும். அதனைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. கடந்த பத்து வருடங்களாக கஷ்டப்பட்ட நீங்கள் இந்த வீடுகளை அடகு வைக்கவோ விற்கவோ கூடாது. இந்த வீடுகளை உங்கள் உயிரைப் போல பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன்று வரையிலான இரண்டு வருடங்களுக்குள் நிம்மியாக மூச்சு விடக்கூடிய சூழலை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது. உணவு, எரிவாயு, எரிபொருள் வரிசையில் நின்று அவதிப்பட்ட மக்கள் இன்று சுமூகமாக வாழ்கின்றனர். வரிசையில் யுகத்தில் கொழும்பு மக்கள் பெரும் அவதிப்பட்டனர். அதிலிருக்கும் மாடிக்குடியிருப்புகளிலும், தோட்டங்களிலும் வசிக்கும் மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

பொருளாதாரத்தைப் பலப்படுத்த நாம் அமுல்படுத்திய வரிக் கொள்கை வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகப்படுத்தியது. ஆனால் அந்த கஷ்டங்களை நீங்கள் தாங்கிக் கொண்டதாலேயே, கடன் வாங்காமலும், பணம் அச்சடிக்காமலும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது. அதனால் தான் இந்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடிந்தது. ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளது.

அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்றிக் கூறும் வகையிலேயே நிரந்தர காணி உரிமை, நிரந்தர வீட்டுரிமையை வழங்குவதாக கருதுகிறேன். எதிர்காலத்தில் 50,000 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படும். நான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1996 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளையும் இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.

காணி, வீட்டு உரிமைகளுக்கான நிரந்தர உரிமைகள் இதற்கு முன்னதாக வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் கல்வி,காணி, வீட்டு, வியாபார உரிமைகளை மக்களுக்கு வழங்கி பொருளாதாரத்தை மக்கள் பக்கம் விரிவுபடுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கான பெரும் பங்களிப்பை அதனூடாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
Reported by:N.Sameera

The post கல்வி, காணி,வீட்டு உரிமைகளை வழங்கி மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதார்களாக்குவோம் appeared first on Vanakkam News.

]]>
https://vanakkamtv.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/feed/ 0 33032
இலங்கையில் புதிய விசா நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது https://vanakkamtv.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%9f/ https://vanakkamtv.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%9f/#respond Wed, 17 Apr 2024 12:14:06 +0000 https://vanakkamtv.com/?p=33018 குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று புதிய வீசா நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும், நாளை முதல் ஆன்லைன் வீசா வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார். புதிய முறையின்படி, விசா வழங்குவதற்கான கட்டணங்கள், தேவையான…

The post இலங்கையில் புதிய விசா நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது appeared first on Vanakkam News.

]]>

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று புதிய வீசா நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும், நாளை முதல் ஆன்லைன் வீசா வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார்.

புதிய முறையின்படி, விசா வழங்குவதற்கான கட்டணங்கள், தேவையான வசதிகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை நவம்பர் 27, 2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் (2360/24) விவரிக்கப்பட்டுள்ளன.

அறிவிப்பின்படி, சுற்றுலா, வணிகம், போக்குவரத்து விசாக்களுக்கான காலம் மற்றும் கட்டணங்கள் பின்வருமாறு:

Reported by:N.Sameera

The post இலங்கையில் புதிய விசா நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது appeared first on Vanakkam News.

]]>
https://vanakkamtv.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%9f/feed/ 0 33018