உலகின் மிகச்சிறந்த நகரங்களின் பட்டியலில் இடம்பெற்ற கனடாவின் 3 நகரங்கள்

பணி-வாழ்க்கைச் சமநிலையான உலகின் மிகச் சிறந்த நகரங்களின் வரிசையில் மூன்று கனேடிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.ஒட்டாவா, வன்கூவர் மற்றும் றொரன்டோ ஆகிய நகரங்கள் இவ்வாறு குறித்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 2022ஆம் ஆண்டுக்கான பணி – வாழ்க்கைச் சமநிலை சுட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பணி மற்றும்…

ஒன்றாரியோவில் ஜக்பொட் பரிசாக 60 மில்லியன் தொகையை வென்றெடுத்த பெண்

ஒன்றாரியோ மாகாணத்தின் ஹமில்டனில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 60 மில்லியன் டொலர் ஜக்பொட் பரிசை வென்றுள்ளார். லியா முராடோ கிரேஸியஸ் என்ற பெண்ணே இவ்வாறு பெரும் பணத் தொகையை பரிசாக வென்றெடுத்துள்ளார்.லொட்டோ ஜக்பொட் லொத்தர் சீட்டிழுப்பில் குறித்த பெண் பரிசு…

கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் 10 வீதத்தினால் உயர்வு

கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் பத்து வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் தங்களது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள நேரிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள்…

கனடாவில் திடீரென தீப்பற்றிய டெஸ்லா கார்!

கனடா நாட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த மின்சாரக் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சாரதி தப்பியுள்ளார். ஜமீல் ஜுத்தா என்ற அந்த நபர், 8 மாதங்களுக்கு முன் வாங்கிய டெஸ்லா நிறுவனத்தின் Y மாடல் மின்சாரக் காரை ஓட்டிச் சென்ற போது…

கனடாவில் திரும்பப் பெறப்படும் Peanut Butter பொருட்கள்

சால்மோனெல்லா பாதிப்புக்கான  சாத்தியம் இருப்பதால், peanut butter தயாரிப்புகள் சில கனடாவில் திரும்பப்பெறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நிறுவனமான J. M. Smucker Co. தாமாகவே முன்வந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் 11 வகையான தயாரிப்புகள் கனடாவில் விற்கப்பட்டு…

இனப்படுகொலையை அங்கீகரித்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு கனடியத் தமிழர் தேசிய அவை நன்றி தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரித்து, ஒவ்வொரு ஆண்டும் மே 18-ஐ தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கும் வகையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டமைக்காக கனடிய நாடாளுமன்றத்துக்கு கனடியத் தமிழர் தேசிய அவை நன்றி தெரிவித்துள்ளது. இந்தத் தீா்மானத்தைக் கொண்டு வந்த நாடாளுமன்ற…

கனடா மீதான தடையை  நீக்கியது  சீனா

கனடா மீதான நீண்ட கால தடையை சீன அரசு நீக்கியது. Huawei CEO மெங் வான்சூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கனோலா விதைகளுக்கு சீனா தடை விதித்துள்ளது.  சீனா மூன்று வருட தடைக்குப் பிறகு தடையை…

கனடாவை பழிவாங்கும் முயற்சியில் ரஷ்யா

கனடாவை பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் ஒரு பக்கம் நடவடிக்கைகளில் இறங்க, மறு பக்கம் ரஷ்யாவே உலக…

இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற சர்ச்சைக்குரிய கனேடிய பொது சபையின் பிரகடனம் பல மேற்கத்திய பாராளுமன்றங்களிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்

இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற சர்ச்சைக்குரிய கனேடிய பொது சபையின் பிரகடனம் பல மேற்கத்திய பாராளுமன்றங்களிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாகி கல்லேஜ் தெரிவித்துள்ளார். இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடித்த மே 18ஆம் திகதியை…

சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei ஐ 5G நெட்வொர்க்கில் இருந்து கனடா தடை செய்துள்ளது

பாதுகாப்புக் காரணங்களுக்காக கனடாவின் ஐந்தாம் தலைமுறை நெட்வொர்க்குகளில் பணிபுரிய Huawei ஐ மத்திய அரசாங்கம் தடை செய்துள்ளது இது நீண்ட கால தாமதம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கை கனடாவை அமெரிக்கா போன்ற முக்கிய உளவுத்துறை கூட்டாளிகளுக்கு ஏற்ப வைக்கிறது,…