வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அல்லது BIMSTEC – விரிகுடாவுக்கு பிரத்தியேகமான பிராந்திய அமைப்பானது இன்று கொழும்பில் ஆரம்பமாகியது.
இந்த மாநாடு இம்மாதம் 30ம் திகதி வரை நடைபெறும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மார்ச் 30 ஆம் திகதி பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்குவார்.
இன்றும் நாளையும் நடைபெறும் பிம்ஸ்டெக் சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
————–
Reported by : Sisil.L