மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான உணவு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த விநியோகஸ்தர்களுக்கு பல மாதங்களுக்கான கொடுப்பனவு நிலுவையிலுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்குவதற்காக அதிக கட்டணத்தின் கீழ் விலை மனு கோரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதனால் குறித்த விநியோகஸ்தர்களுக்கான கட்டணத்தை செலுத்த முடியாது போனதால், உணவு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Reported by :S.Kumara