நாட்டிற்கு வந்துள்ள பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் மற்றும் அவரது குழந்தை ஆகியோருக்கு குரங்கம்மை எனப்படும் Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் தற்போது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த பெண்ணுக்கு அவரது கணவரிடம் இருந்து நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
பிறந்து 15 நாட்களேயான குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் G.விஜேசூரிய தெரிவித்தள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டதாக வைத்தியர் G.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
Reported by:S.Kumara