போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் மாத்தளை – அலவத்துகொடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்
போலியான நாணயத்தாள்களை அச்சிட்டமை மற்றும் அவற்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலவத்துகொடையை சேர்ந்த 36 மற்றும் 41 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
சந்தேகநபர்கள் வசமிருந்த 43, ஐயாயிரம் ரூபா போலி நாயணத்தாள்கள், நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்திய இயந்திரங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களில் ஒருவர் புகைப்படக் கலையகமொன்றை நடத்திச்செல்பவரெனவும் அங்குள்ள அச்சு இயந்திரத்தை பயன்படுத்தி போலி நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Reported by:Maria.s