இந்த வருடத்தின் இறுதிக்குள் நாட்டை வழமையான நிலைக்கு

இந்த வருடத்தின் இறுதிக்குள் நாட்டை வழமையான நிலைக்கு கொண்டுவருவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார். 

புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று(02) காலை 09.00 மணியளவில் விசேட வைபவமொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அரச ஊழியர்கள் இதன்போது உறுதிமொழி வழங்கினர்.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *