எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் காகிதமற்ற மின்சார பட்டியலும் பற்றுச்சீட்டும் அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வீதி விளக்குகளை பொருத்துதல், அவற்றை இயக்குவதை ஒழுங்குபடுத்துதல் குறித்தும் மின்சார சபைக்கு வெளியே மேற்கொள்ள வேண்டிய பணிகளை தற்போதுள்ள ஊழியர்களை பயன்படுத்தி மேற்கொள்ளவும், தற்போது முன்னெடுக்க முடியாத பணிகளை பிரதேச சபைகளின் உதவியுடன் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மின்சார சபையின் செலவுகளைக் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அதன் புதிய தலைமையக நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன
Reported by :Maria.S