நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று(14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைகள் வருமாறு:
வரி செலுத்தப்படாமை அல்லது வேறு காரணங்களுக்காக இலங்கை சுங்கத்தால் தடுத்துவைக்கப்பட்ட வாகனங்களை சம்பந்தப்பட்ட வரி மற்றும் தண்டப்பணம் செலுத்தப்படுவதன் கீழ் விடுவிக்க யோசனை
2022/24 ஆம் ஆண்டு பருவ காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நீண்ட கால திறமை அடிப்படையில் அரச பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதனை 40 இலிருந்து 50 வீதம் வரை படிப்படியாக உயர்த்த யோசனை
வறிய பிரதேசங்களில் அமைந்துள்ள 1000 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பாடசாலைகளுக்கு இலவச இணையத்தள வசதி
சிறைச்சாலை கைதிகளின் கழிவறை வசதிகளை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடுகுடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக விதிக்கப்படும் கடவுச்சீட்டு கட்டணம், விசாக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்களை அதிகரிக்க யோசனை
வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இளைஞர், யுவதிகளை பயிற்றுவிக்க தேசிய இளைஞர் மன்றத்திற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
மதுபானங்களின் தரம் குறித்து பரிசோதிப்பதற்காக ஆய்வுகூடமொன்றை நிறுவ 100 மில்லியன் ஒதுக்கீடு
ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து உத்தேச சுகாதார மற்றும் காப்புறுதிக்காக நிதி ஒதுக்குவதற்காக ஊழியர் பொறுப்பு நிதிய சட்டமூலத்தை மறுசீரமைக்க யோசனை
வரி அறவிடுதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவை ஸ்தாபிக்க யோசனை பிரஜைகளின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக தனிப்பட்ட தகவல்களை தயாரிக்கும் பிரிவிற்கு தகவல்கள் பாதுகாப்பு அதிகார சபையை ஸ்தாபிக்க யோசனை
10 விவசாய முயற்சியாண்மை கிராமங்களை ஸ்தாபிக்க யோசனை
மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்துவதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
வௌிநாட்டு உதவிகள் மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்புடன் மத ஸ்தலங்களுக்கு சூரிய மின்கலங்களை வழங்க யோசனை
குடிநீர் போத்தல்களுக்கு பாதுகாப்பு முத்திரையை அறிமுகப்படுத்தவும் பின்தொடரவும்
Reported by :Maria.S